சங்கீதம்
யூதாவின் வனாந்தரத்தில் இருந்தபோது+ தாவீது பாடிய சங்கீதம்.
63 கடவுளே, நீங்கள்தான் என் கடவுள். நான் எப்போதும் உங்களைத் தேடுகிறேன்.+
உங்களுக்காகத் தவிக்கிறேன்.+
தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் தேசத்திலே,
உங்களுக்காகத் தவித்துத் தவித்துத் துவண்டு விழுகிறேன்.+
5 அருமையான விருந்தைச் சாப்பிட்டது போல நான் திருப்தியாக உணர்கிறேன்.
அதனால், சந்தோஷம் பொங்க என் உதடுகளால் உங்களைப் புகழ்வேன்.+
6 படுத்திருக்கும் நேரத்தில் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
நடுராத்திரியில் உங்களைப் பற்றித் தியானித்துப் பார்க்கிறேன்.+
7 ஏனென்றால், நீங்கள்தான் எனக்குத் துணை.+
உங்களுடைய சிறகுகளின் நிழலில் சந்தோஷத்தோடு உங்களைப் புகழ்ந்து பாடுவேன்.+
8 உங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் வலது கை என்னைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறது.+
9 என் உயிரை எடுக்கத் துடிப்பவர்கள்
பூமியின் ஆழத்துக்குள் புதைந்துபோவார்கள்.
11 ஆனால், கடவுளை நினைத்து ராஜா சந்தோஷப்படுவார்.
கடவுளுடைய பெயரில் சத்தியம் செய்கிற எல்லாரும் பூரித்துப்போவார்கள்.*
ஏனென்றால், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.