ஓசியா
2 யெகோவாவிடம் திரும்பி வா. அவரிடம்,
‘எங்களுடைய பாவங்களை மன்னியுங்கள்,+ எங்களிடமிருந்து நல்லதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது, இளம் காளைகளைச் செலுத்துவதுபோல் எங்கள் உதடுகளால் உங்களுக்குப் புகழைச் செலுத்துவோம்.+
3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது.+
இனி நாங்கள் குதிரைகளில் ஏற மாட்டோம்.+
நாங்கள் உண்டாக்கியவற்றைப் பார்த்து, “எங்கள் கடவுளே!” என்று சொல்ல மாட்டோம்.
ஏனென்றால், அப்பா இல்லாத பிள்ளைக்கு இரக்கம் காட்டுபவர் நீங்கள்தான்’+ என்று சொல்.
4 அவனை நான் குணமாக்குவேன்; அவன் இனி துரோகம் செய்ய மாட்டான்.+
5 நான் இஸ்ரவேலுக்குப் பனித்துளிபோல் இருப்பேன்.
அவன் லில்லி பூவைப் போல் பூத்துக் குலுங்குவான்.
லீபனோனின் மரங்களைப் போல் வேரூன்றி நிற்பான்.
6 அவனுடைய கிளைகள் விரிந்திருக்கும்.
அவன் ஒலிவ மரத்தைப் போல் கம்பீரமாக நிற்பான்.
லீபனோனைப் போல் மணம் வீசுவான்.
7 அவன் மறுபடியும் என் நிழலில் தங்குவான்.
தானியத்தைப் பயிர் செய்வான், திராட்சைக் கொடிபோல் அரும்பு விடுவான்.+
லீபனோனின் திராட்சமதுபோல் அவனுடைய புகழ் பரவும்.
8 ‘எனக்கும் உருவச் சிலைகளுக்கும் இனி என்ன சம்பந்தம்?’ என்று எப்பிராயீம் சொல்வான்.+
நான் அவனுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பேன், அவனைப் பாதுகாப்பேன்.+
பச்சைப்பசேலென்று நிற்கும் ஆபால் மரத்தைப் போல் இருப்பேன்.
என்னிடமிருந்து அவன் பழங்களைப் பறிப்பான்.”
9 ஞானமுள்ளவன் யார்? அவன் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ளட்டும்.
விவேகமுள்ளவன் யார்? அவன் இவற்றைத் தெரிந்துகொள்ளட்டும்.
ஏனென்றால், யெகோவாவின் வழிகள் நேர்மையானவை.+
அந்த வழிகளில் நீதிமான்கள் நடப்பார்கள்,
ஆனால், குற்றவாளிகள் தடுக்கி விழுவார்கள்.