சங்கீதம்
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.
130 யெகோவாவே, ஆழத்திலிருந்து* உங்களைக் கூப்பிடுகிறேன்.+
2 யெகோவாவே, என் குரலைக் கேளுங்கள்.
உதவிக்காக நான் கெஞ்சுவதை உங்கள் காதுகளால் கவனித்துக் கேளுங்கள்.
3 “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால்,
யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+
5 நான் யெகோவாவையே நம்பியிருக்கிறேன், என் ஜீவன் அவரையே நம்பியிருக்கிறது.
அவருடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.
6 காவல்காரர்கள் விடியலுக்காகக் காத்திருப்பதைவிட,
ஆம், காவல்காரர்கள் விடியலுக்காகக் காத்திருப்பதைவிட,+
அதிக ஆவலோடு நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்.+
7 இஸ்ரவேல் யெகோவாவுக்காகக் காத்திருக்கட்டும்.
ஏனென்றால், யெகோவா மாறாத அன்புள்ளவர்.+
விடுவிப்பதற்கான வல்லமை அவரிடம் அளவில்லாமல் இருக்கிறது.
8 இஸ்ரவேலர்களை அவர்களுடைய எல்லா குற்றங்களிலிருந்தும் அவர் விடுவிப்பார்.