சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; முத்லபேன்* இசையில்; தாவீதின் சங்கீதம்.
א [ஆலெஃப்]
2 உங்களை நினைத்து நினைத்து சந்தோஷத்தில் பூரிப்பேன்.
ב [பேத்]
4 நீங்கள் என் வழக்கை நியாயமாகத் தீர்த்து வைக்கிறீர்கள்.
உங்களுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து நீதி வழங்குகிறீர்கள்.+
ג [கீமெல்]
5 தேசங்களைக் கண்டனம் செய்து,+ பொல்லாதவர்களை ஒழித்தீர்கள்.
அவர்களுடைய பெயரைச் சுவடு தெரியாமல் என்றென்றைக்குமாக அழித்தீர்கள்.
6 எதிரிகள் அடியோடு அழிக்கப்பட்டார்கள்.
அவர்களுடைய நகரங்களை நீங்கள் தரைமட்டமாக்கினீர்கள்.
அவர்களை இனி யாரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.+
ה [ஹே]
7 ஆனால், யெகோவா என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்.+
நியாயம் வழங்குவதற்காகவே அவருடைய சிம்மாசனத்தை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.+
ו [வா]
9 அடக்கி ஒடுக்கப்படுகிற மக்களுக்கு யெகோவா பாதுகாப்பான* அடைக்கலமாக இருப்பார்.+
இக்கட்டான காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான அடைக்கலமாக இருப்பார்.+
10 உங்களுடைய பெயரைத் தெரிந்தவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.+
யெகோவாவே, உங்களைத் தேடி வருகிறவர்களை நீங்கள் கைவிடவே மாட்டீர்கள்.+
ז [ஸாயின்]
11 சீயோனில் குடியிருக்கிற யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.
அவருடைய செயல்களை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.+
12 அவர்களுடைய இரத்தத்துக்காகப் பழிவாங்குகிறவர் அவர்களை நினைத்துப் பார்ப்பார்.+
கஷ்டப்படுகிறவர்களின் கூக்குரலை மறக்க மாட்டார்.+
ח [ஹேத்]
13 மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே,+
எனக்குக் கருணை காட்டுங்கள்.
என்னை வெறுக்கிறவர்கள் எனக்குக் கொடுக்கிற கஷ்டத்தைப் பாருங்கள்.
14 அப்போது, உங்களுடைய அருமையான* செயல்களை சீயோன் மகளுடைய வாசல்களில் சொல்வேன்.+
நீங்கள் தரும் மீட்பினால் சந்தோஷப்படுவேன்.+
ט [டேத்]
15 மக்கள் தாங்கள் வெட்டிய குழியிலேயே விழுந்தார்கள்.
அவர்களுடைய கால் அவர்கள் விரித்த வலையிலேயே சிக்கிக்கொண்டது.+
16 யெகோவா நிறைவேற்றும் தண்டனைத் தீர்ப்புகள் அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகின்றன.+
பொல்லாதவன் தன்னுடைய கைகளின் செயல்களினாலேயே ஆபத்தில் சிக்கிக்கொண்டான்.+
இகாயோன்.* (சேலா)
י [யோத்]
17 பொல்லாதவன் கல்லறைக்குப் போய்ச் சேருவான்.
கடவுளை மறந்துவிடுகிற ஜனங்களும் அங்கேதான் போய்ச் சேருவார்கள்.
כ [காஃப்]
19 யெகோவாவே, எழுந்து வாருங்கள்! அற்ப மனுஷனை ஜெயிக்க விடாதீர்கள்.
எல்லா தேசத்து ஜனங்களும் உங்கள் முன்னால் தீர்ப்பு பெறட்டும்.+