சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம்.
49 மக்களே, எல்லாரும் இதைக் கேளுங்கள்.
உலக ஜனங்களே, எல்லாரும் கவனியுங்கள்.
2 சிறியவர்களே, பெரியவர்களே,
ஏழைகளே, பணக்காரர்களே, எல்லாரும் கேளுங்கள்.
4 பழமொழியை நான் காதுகொடுத்துக் கேட்பேன்.
யாழ் இசைத்துக்கொண்டே என் விடுகதையை விளக்குவேன்.
5 கொடிய காலங்களில் நான் எதற்காகப் பயப்பட வேண்டும்?+
என்னைக் கவிழ்க்க நினைக்கிறவர்களின் அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போது
நான் ஏன் நடுங்க வேண்டும்?
6 சொத்துகள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களோ,+
சொத்துகளைக் குவித்து வைத்திருப்பதாகப் பெருமை பேசுகிறவர்களோ,+
7 யாராக இருந்தாலும், இன்னொருவனின் உயிரை மீட்கவே முடியாது.
அவனுக்காகக் கடவுளுக்கு மீட்புவிலையைக் கொடுக்கவும் முடியாது.+
8 (அவர்களுடைய உயிருக்கான மீட்புவிலை ரொம்பவே பெரிது.*
அதை அவர்களால் கொடுக்கவே முடியாது.)
9 சவக்குழிக்குள் போகாமல் என்றென்றும் வாழும்படி ஒருவனை யாராலும் மீட்க முடியாது.+
10 ஞானமுள்ளவர்கள்கூட செத்துப்போவதை அவர்கள் பார்க்கிறார்கள்.
முட்டாள்களும் புத்தி இல்லாதவர்களும் அழிந்துபோகிறார்கள்.+
அவர்கள் தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்குத்தான் விட்டுவிட்டுப் போக வேண்டியிருக்கிறது.+
11 ஆனாலும், தங்களுடைய வீடுகள் காலாகாலத்துக்கு இருக்க வேண்டுமென்றும்,
தங்களுடைய கூடாரங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்க வேண்டுமென்றுமே ஆசைப்படுகிறார்கள்.
அதனால், தங்களுடைய நிலபுலன்களுக்குத் தங்களுடைய பெயரை வைத்துக்கொள்கிறார்கள்.
12 ஆனால், மனிதனுக்கு எவ்வளவுதான் மதிப்பு மரியாதை இருந்தாலும்,
அவனால் நிலைத்திருக்க முடியாது.+
அழிந்துபோகிற மிருகங்களைப் போலத்தான் அவனும் இருக்கிறான்.+
13 முட்டாள்களுக்கும்,+ அவர்களுடைய வழியில் போகிறவர்களுக்கும்,
அவர்களுடைய வீண் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் அதே முடிவுதான் வரும். (சேலா)
14 வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிற செம்மறியாடுகள்போல்
அவர்கள் கல்லறைக்குக் கொண்டுபோகப்படுகிறார்கள்.
இனி சாவுதான் அவர்களுடைய மேய்ப்பன்.
இனி மாளிகையில் குடியிருக்காமல் கல்லறையில்தான்+ குடியிருப்பார்கள்.+
15 ஆனால், கல்லறையின் கோரப் பிடியிலிருந்து கடவுள் என்னை விடுவிப்பார்.+
அவர் என்னைக் கைப்பிடித்துத் தூக்கிவிடுவார். (சேலா)
16 ஒருவன் பணக்காரனாவதைப் பார்த்தோ,
அவனுடைய வீடு ஆடம்பரமாகிக்கொண்டே போவதைப் பார்த்தோ நீ பயப்படாதே.
17 ஏனென்றால், சாகும்போது அவனால் எதையுமே கொண்டுபோக முடியாது.+
அவனுடைய சொத்துப்பத்துகள் எதுவும் அவனோடு போகாது.+
18 உயிரோடு இருக்கும்போது அவன் தன்னையே பாராட்டிக்கொள்கிறான்.+
(ஒருவனுக்கு வசதிவாய்ப்புகள் பெருகும்போது ஜனங்கள் அவனைப் புகழ்வார்கள்.)+
19 ஆனால் கடைசியில், தன்னுடைய முன்னோர்களைப் போலவே அவன் செத்துப்போகிறான்.
அவர்கள் யாரும் இனி வெளிச்சத்தைப் பார்க்கவே மாட்டார்கள்.
அழிந்துபோகிற மிருகங்களைப் போலத்தான் இருப்பான்.