சங்கீதம்
மஸ்கீல்.* தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது+ செய்த ஜெபம்.
2 என் கவலைகளை அவர்முன் கொட்டுகிறேன்.
என் வேதனைகளை அவர்முன் சொல்கிறேன்.+
3 நான் நொந்துபோயிருக்கும்போது,* அவரிடம் வேண்டுகிறேன்.
என் பாதையை அவர் கவனிக்கிறார்.+
நான் போகும் வழியில்
எதிரிகள் கண்ணிகளை வைக்கிறார்கள்.
நான் அடைக்கலம் தேடி ஓடுவதற்கு இடமே இல்லை.+
என்னைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை.
5 யெகோவாவே, உதவிக்காக உங்களைக் கூப்பிடுகிறேன்.
“நீங்கள்தான் எனக்கு அடைக்கலம்,+
இந்த உலகத்தில் உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை” என்று சொல்கிறேன்.
6 உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.
நான் ரொம்பவே துவண்டுபோயிருக்கிறேன்.
என்னைத் துன்புறுத்துகிற ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+
அவர்கள் என்னைவிட பலசாலிகளாக இருக்கிறார்கள்.
7 நான் உங்களுடைய பெயரைப் புகழ விரும்புகிறேன்.
அதனால், இந்தச் சிறையிலிருந்து என்னை வெளியே கொண்டுவாருங்கள்.
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளட்டும்.
நீங்கள் எனக்கு அன்போடு உதவுகிறீர்களே!