சங்கீதம்
தாவீதின் பாடல். மஸ்கீல்.*
2 யெகோவா யாரைக் குற்றவாளி என்று தீர்க்காமல் இருக்கிறாரோ,+
யாருடைய மனதில் சூதுவாது இல்லையோ, அவர் சந்தோஷமானவர்.
4 ராத்திரி பகலாக உங்களுடைய கை என்னை அழுத்திக்கொண்டே இருந்தது.*+
கோடை வெயிலில் வற்றிப்போகும் தண்ணீர்போல் என் சக்தியெல்லாம் வற்றிப்போனது. (சேலா)
“என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்”+ என்றேன்.
நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.+ (சேலா)
6 அதனால், உங்களுக்கு உண்மையோடு* இருக்கிற ஒவ்வொருவரும் உங்களிடம் ஜெபம் செய்வார்கள்.+
வாய்ப்பு இருக்கும்போதே உங்களைத் தேடுவார்கள்.+
அப்போது, பாய்ந்து வரும் வெள்ளம்கூட அவர்களை நெருங்காது.
எனக்கு விடுதலை தந்து, என்னைச் சுற்றிலும் சந்தோஷ ஆரவாரம் கேட்கும்படி செய்வீர்கள்.+ (சேலா)
8 “நான் உனக்கு விவேகத்தை* தந்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்.+
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு அறிவுரை சொல்வேன்.+
9 கடிவாளமோ கயிறோ போட்டுக் கட்டினால் தவிர
உன் பக்கத்தில் கொண்டுவர முடியாத
10 பொல்லாதவனுக்குப் பல வேதனைகள் வரும்.
ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவனை அவருடைய மாறாத அன்பு சூழ்ந்துகொள்ளும்.+
11 நீதிமான்களே, யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுங்கள்.
நேர்மையான நெஞ்சமுள்ளவர்களே, சந்தோஷ ஆரவாரம் செய்யுங்கள்.