சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; கித்தீத்* இசையில்; ஆசாப்பின்+ பாடல்.
81 நம் பலமாக இருக்கிற கடவுளுக்குமுன் சந்தோஷ ஆரவாரம் செய்யுங்கள்.+
யாக்கோபின் கடவுளுக்குமுன் வெற்றி முழக்கம் செய்யுங்கள்.
2 இன்னிசையை ஆரம்பியுங்கள், கஞ்சிராவை எடுத்துத் தட்டுங்கள்.
இனிய ஓசை எழுப்பும் யாழையும் நரம்பிசைக் கருவியையும் வாசியுங்கள்.
3 மாதப் பிறப்பு* நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+
பண்டிகை கொண்டாடப்படுகிற பௌர்ணமி நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+
அடையாளம் தெரியாத ஒரு குரலை* நான் கேட்டேன்.
6 அது இப்படிச் சொன்னது: “அவனுடைய தோளில் இருந்த சுமையை நான் எடுத்துவிட்டேன்.+
கூடையைப் பிடித்திருந்த அவனுடைய கைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டேன்.
மேரிபாவின்* தண்ணீருக்குப் பக்கத்தில் உன்னைச் சோதித்தேன்.+ (சேலா)
8 என் ஜனங்களே, கேளுங்கள்.
நான் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வேன்.
இஸ்ரவேலே, நான் சொல்வதை நீ கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+
10 யெகோவாவாகிய நான்தான் உன் கடவுள்.
எகிப்து தேசத்திலிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தவர் நான்தான்.+
உன் வாயை நன்றாகத் திற, நான் அதை நிரப்புவேன்.+
12 அதனால், அவர்களுடைய பிடிவாதமான இதயத்தின்படி நடக்க அவர்களை விட்டுவிட்டேன்.
அவர்களுக்கு எது சரியென்று பட்டதோ அதைத்தான் செய்தார்கள்.+
13 என் ஜனங்கள் என் பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+
இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!+
14 அப்போது, அவர்களுடைய எதிரிகளை நான் உடனடியாக அடக்கிவிடுவேன்.
என் கையை நீட்டி அவர்களுடைய விரோதிகளைத் தாக்குவேன்.+
15 யெகோவாவை வெறுப்பவர்கள் அவருக்குமுன் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.
அவர்களுக்கு வரப்போகும் நிலைமை என்றென்றுமே மாறாது.