சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; செமினீத்* இசையில் நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டிய தாவீதின் சங்கீதம்.
2 யெகோவாவே, நான் பலவீனமாகிக்கொண்டே போகிறேன்; எனக்குக் கருணை* காட்டுங்கள்.
யெகோவாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன, என்னைக் குணப்படுத்துங்கள்.+
3 நான் வேதனையில் தவியாய்த் தவிக்கிறேன்.+
யெகோவாவே, நீங்களே சொல்லுங்கள், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கஷ்டம்?+
4 யெகோவாவே, நீங்கள் வந்து என்னுடைய உயிரைக் காப்பாற்றுங்கள்.+
உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள்.+
5 இறந்த பிறகு யாரால் உங்களைப் பற்றிப் பேச* முடியும்?
கல்லறைக்குப் போன பிறகு யாரால் உங்களைப் புகழ முடியும்?+
6 நான் பெருமூச்சுவிட்டு பெருமூச்சுவிட்டுக் களைத்துப்போகிறேன்.+
ராத்திரியெல்லாம் அழுது அழுது என் படுக்கையைக் கண்ணீரால் நனைக்கிறேன்,
என் கட்டிலைக் குளமாக்குகிறேன்.+
7 துக்கத்தில் என் கண்ணே சோர்ந்துவிட்டது.+
என்னைக் கொடுமைப்படுத்துகிற ஆட்களால் என் பார்வையே மங்கிவிட்டது.