சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; “லில்லி மலர்கள்” என்ற இசையில்; ஒரு நினைப்பூட்டுதல். ஆசாப்பின்+ சங்கீதம்.
கேருபீன்களுக்கு மேலாக* வீற்றிருக்கிறவரே,+ ஒளிவீசுங்கள்.
2 எப்பிராயீமுக்கும், பென்யமீனுக்கும், மனாசேக்கும் முன்னால்
உங்கள் வல்லமையைக் காட்டுங்கள்.+
எங்களை மீட்க வாருங்கள்.+
3 கடவுளே, திரும்பவும் எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.+
உங்கள் முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க வையுங்கள், அப்போது நாங்கள் பிழைப்போம்.+
4 பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலம் உங்கள் மக்களின் ஜெபத்தை வெறுத்து ஒதுக்குவீர்கள்?+
5 கண்ணீரை அவர்களுக்கு உணவாகக் கொடுக்கிறீர்கள்.
கண்ணீரையே குடம் குடமாகக் குடிக்கவும் வைக்கிறீர்கள்.
6 சுற்றுவட்டார மக்கள் எங்களைப் பிடிக்க போட்டாபோட்டி போடுவதற்கு விடுகிறீர்கள்.
விரோதிகள் எங்களை இஷ்டம்போல் கேலி செய்கிறார்கள்.+
7 பரலோகப் படைகளின் கடவுளே, திரும்பவும் எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.
உங்கள் முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க வையுங்கள், அப்போது நாங்கள் பிழைப்போம்.+
8 நீங்கள் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக்+ கொண்டுவந்தீர்கள்.
மற்ற தேசத்து மக்களைத் துரத்திவிட்டு அதை நட்டு வைத்தீர்கள்.+
10 அதன் நிழல் மலைகளை மூடியது.
அதன் கிளைகள் கடவுளுடைய தேவதாரு மரங்களை மூடின.
12 அந்தத் திராட்சைத் தோட்டத்தின் கற்சுவர்களை ஏன் இடித்துப்போட்டீர்கள்?+
போவோர் வருவோர் எல்லாரும் அதன் பழங்களைப் பறிக்கும்படி ஏன் செய்தீர்கள்?+
14 பரலோகப் படைகளின் கடவுளே, தயவுசெய்து எங்களிடம் திரும்புங்கள்.
பரலோகத்திலிருந்து கீழே பாருங்கள்.
இந்தத் திராட்சைக் கொடியைக் கவனித்துக்கொள்ளுங்கள்.+
16 இந்தக் கொடி வெட்டப்பட்டு நெருப்பில் போடப்படுகிறது.+
நீங்கள் மிரட்டும்போது அவர்கள் அழிந்துபோகிறார்கள்.
17 உங்களுடைய வலது பக்கத்தில் நிற்கிற மனிதனுக்குக் கைகொடுத்து உதவுங்கள்.
உங்களுக்காக நீங்கள் பலப்படுத்திய மனிதகுமாரனுக்கு ஆதரவு கொடுங்கள்.+
18 அப்போது, நாங்கள் உங்களைவிட்டுப் போகவே மாட்டோம்.
எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள், அப்போது உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வோம்.