சங்கீதம்
99 யெகோவா ராஜாவாகிவிட்டார்,+ மக்கள் நடுநடுங்கட்டும்.
கேருபீன்களுக்கு மேலாக* அவர் வீற்றிருக்கிறார்,+ பூமி அதிரட்டும்.
3 கடவுளே, உங்களுடைய மகத்தான பெயரை அவர்கள் புகழட்டும்.+
ஏனென்றால், அது பயபக்திக்குரியது, பரிசுத்தமானது.
4 அவர் பலம்படைத்த ராஜா, நியாயத்தை நேசிக்கிறவர்.+
கடவுளே, நீங்கள் நேர்மையை நிலைநாட்டியிருக்கிறீர்கள்.
யாக்கோபின் வம்சத்தாருக்கு நீதியும் நியாயமும் செய்திருக்கிறீர்கள்.+
அவர் பரிசுத்தமானவர்.+
6 யெகோவா நியமித்த குருமார்களில் மோசேயும் ஆரோனும்,+
அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டவர்களில் சாமுவேலும்,+
அவரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.
அவர் அவர்களுக்குப் பதில் கொடுத்தார்.+
7 மேகத் தூணிலிருந்து அவர்களிடம் பேசினார்.+
அவருடைய நினைப்பூட்டுதல்களையும் கட்டளைகளையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள்.+
8 எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் அவர்களுக்குப் பதில் கொடுத்தீர்கள்.+