சகரியா
3 யெகோவாவின் தூதருக்கு முன்னால் தலைமைக் குருவாகிய யோசுவா+ நின்றுகொண்டிருந்ததை அவர் எனக்குக் காட்டினார். யோசுவாவை எதிர்ப்பதற்காக அவருடைய வலது பக்கத்தில் சாத்தான் நின்றுகொண்டிருந்தான்.+ 2 பின்பு யெகோவாவின் தூதர் சாத்தானிடம், “சாத்தானே, யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்!+ எருசலேமைத் தேர்ந்தெடுத்த யெகோவா+ உன்னைக் கண்டிக்கட்டும்! இந்த மனுஷன், எரிகிற நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை போல இருக்கிறான்” என்று சொன்னார்.
3 யோசுவா அழுக்கான உடையைப் போட்டுக்கொண்டு கடவுளுடைய தூதருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தார். 4 அந்தத் தூதர் தனக்கு முன்னால் நின்றிருந்தவர்களிடம், “அவனுடைய அழுக்கான உடையைக் கழற்றுங்கள்” என்று சொன்னார். பின்பு யோசுவாவைப் பார்த்து, “உன்னுடைய குற்றங்களை உன்னைவிட்டு நீக்கிவிட்டேன், நீ போட்டுக்கொள்வதற்கு விசேஷ உடைகளைத் தருவேன்”+ என்றார்.
5 அப்போது நான், “சுத்தமான தலைப்பாகையை அவருக்குப் போட்டுவிடுங்கள்”+ என்று சொன்னேன். உடனே அவர்கள், சுத்தமான தலைப்பாகையையும் விசேஷ உடைகளையும் அவருக்குப் போட்டுவிட்டார்கள்; யெகோவாவின் தூதர் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார். 6 பின்பு யெகோவாவின் தூதர் யோசுவாவிடம், 7 “‘நான் காட்டும் வழியில் நடந்து, நான் கொடுத்த பொறுப்புகளைச் செய்தால், என்னுடைய ஜனங்களுக்கு நீ நீதிபதியாக இருப்பாய்,+ என்னுடைய வீட்டை* கவனித்துக்கொள்வாய். இங்கு நிற்பவர்களைப் போலவே எப்போது வேண்டுமானாலும் என் முன்னிலையில் வருகிற பாக்கியத்தைப் பெற்றுக்கொள்வாய்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
8 ‘தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும் உனக்கு முன்பாக உட்காருகிற உன் நண்பர்களும் நான் சொல்வதைத் தயவுசெய்து கேளுங்கள். எதிர்கால சம்பவங்களுக்கு நீங்கள் ஒரு அடையாளமாக இருக்கிறீர்கள். இதோ, தளிர்+ என்றழைக்கப்படும் என் ஊழியனை நான் அழைத்து வருகிறேன்.+ 9 யோசுவாவுக்கு முன்னால் நான் வைத்துள்ள கல்லைப் பாருங்கள்! அதன்மேல் ஏழு கண்கள் இருக்கின்றன. நான் உளியால் அதில் செதுக்குகிறேன். இந்தத் தேசத்தின் குற்றங்களை ஒரே நாளில் நீக்கிவிடுவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
10 ‘அந்த நாளில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்து பேசுவதற்காக அக்கம்பக்கத்தாரைக் கூப்பிடுவீர்கள்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்” என்றார்.