சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; ஒரு நினைப்பூட்டுதலாக தாவீது பாடிய பாடல்.
2 என்னைத் தீர்த்துக்கட்ட வழிதேடுகிறவர்கள்
அவமானத்தில் தலைகுனியட்டும்.
நான் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள்
வெட்கப்பட்டுப் பின்வாங்கட்டும்.
3 என்னைப் பார்த்துக் கேலி செய்கிறவர்கள்
அவமானப்பட்டு ஓடட்டும்.
நீங்கள் தருகிற மீட்பை விரும்புகிறவர்கள்
“கடவுளுக்கு மகிமை சேரட்டும்!” என்று எப்போதும் சொல்லட்டும்.