சங்கீதம்
தாவீது தன்னுடைய மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பித்து ஓடியபோது பாடிய சங்கீதம்.+
3 யெகோவாவே, ஏன் இத்தனை பேர் என் எதிரிகளாகிவிட்டார்கள்?+
ஏன் இத்தனை பேர் எனக்கு எதிராகக் கிளம்பிவிட்டார்கள்?+
2 “கடவுள் அவனைக் காப்பாற்ற மாட்டார்”
என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.+ (சேலா)*
3 ஆனால் யெகோவாவே, நீங்கள் கேடயம்போல் எல்லா பக்கத்திலிருந்தும் என்னைப் பாதுகாக்கிறீர்கள்.+
நீங்கள்தான் என் மகிமை,+ நீங்கள்தான் என்னைத் தலைநிமிர வைப்பவர்.+
4 யெகோவாவை நோக்கி நான் சத்தமாகக் கூப்பிடுவேன்.
பரிசுத்த மலையிலிருந்து+ அவர் எனக்குப் பதில் சொல்வார். (சேலா)
5 யெகோவா எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார்.
அதனால், நான் படுத்துத் தூங்கி,
7 யெகோவாவே, எழுந்து வாருங்கள்! என் கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்!+
நீங்கள் என் எதிரிகள் எல்லாருடைய தாடையையும் நொறுக்குவீர்களே.
பொல்லாதவர்களுடைய பற்களை உடைப்பீர்களே.+
8 யெகோவாவே, நீங்கள்தான் மீட்பு தருகிறீர்கள்.+
உங்களுடைய ஜனங்களை நீங்கள்தான் ஆசீர்வதிக்கிறீர்கள். (சேலா)