சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். ஒரு பாடல்.
65 கடவுளே, சீயோனில் உங்களுக்குப் புகழ்மாலை காத்திருக்கிறது.+
எங்களுடைய நேர்த்திக்கடன்களை நாங்கள் உங்களுக்குச் செலுத்துவோம்.+
2 ஜெபத்தைக் கேட்கிறவரே, எல்லா விதமான மக்களும் உங்களைத் தேடி வருவார்கள்.+
4 உங்களுடைய பிரகாரங்களில் தங்குவதற்காக நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து,
உங்கள் பக்கத்தில் கொண்டுவருகிறீர்களோ அவர் சந்தோஷமானவர்.+
நாங்கள் உங்களுடைய வீடாகிய பரிசுத்த ஆலயத்தில்+ கிடைக்கும் நன்மைகளால் திருப்தியடைவோம்.+
5 எங்களை மீட்கும் கடவுளே,
உங்களுடைய நீதியினால் பிரமிப்பான காரியங்களைச் செய்து எங்களுக்குப் பதில் தருவீர்கள்.+
பூமியெங்கும் குடியிருக்கிற மக்களுக்கும்,
தொலைதூரக் கடல் பகுதிகளில் இருக்கிற ஜனங்களுக்கும்
நீங்கள்தான் நம்பிக்கையாக இருக்கிறீர்கள்.+
8 நீங்கள் செய்கிற அடையாளங்களைப் பார்த்து தொலைதூரத்தில் வாழ்கிறவர்கள் மலைத்துப்போவார்கள்.+
கிழக்கிலிருந்து மேற்குவரை* இருக்கிறவர்களை நீங்கள் சந்தோஷ ஆரவாரம் செய்ய வைப்பீர்கள்.
9 நீங்கள் பூமியை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறீர்கள்.
அதைச் செழிப்பாக்குகிறீர்கள், அமோகமாக விளைய வைக்கிறீர்கள்.+
உங்கள் ஓடையைப் பெருக்கெடுத்து ஓட வைக்கிறீர்கள்.
மக்களுக்குத் தானியத்தைத் தருகிறீர்கள்.+
இந்த விதத்தில்தான் பூமியைப் படைத்திருக்கிறீர்கள்.
10 வயல்களின் சால்களில்* தண்ணீரை நிரப்பி, அவற்றின் வரப்புகளை* சமப்படுத்துகிறீர்கள்.
மழையைப் பொழிந்து மண்ணை மிருதுவாக்கி, அதன் விளைச்சலை ஆசீர்வதிக்கிறீர்கள்.+
11 நீங்கள் பொழியும் நன்மைகள் வருஷத்துக்குக் கிரீடம் சூட்டுவதுபோல் இருக்கிறது.
உங்கள் பாதைகள் நிரம்பி வழிகின்றன.+
12 வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்களும் நிரம்பி வழிந்தபடி இருக்கின்றன.+
மலைகள் சந்தோஷத்தை உடைபோல் உடுத்தியிருக்கின்றன.+
13 மேய்ச்சல் நிலங்களில் மந்தைகள் நிறைந்திருக்கின்றன.
பள்ளத்தாக்குகளைத் தானியங்கள் கம்பளம்போல் போர்த்தியிருக்கின்றன.+
அவையெல்லாம் வெற்றி முழக்கம் செய்து, பாட்டுப் பாடுகின்றன.+