சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; ஒரு பாடல். சங்கீதம்.
66 பூமியெங்கும் குடியிருக்கிறவர்களே, கடவுளுக்குமுன் வெற்றி முழக்கம் செய்யுங்கள்.+
2 அவருடைய மகிமையான பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*
அவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்துங்கள்.+
3 கடவுளிடம் இப்படிச் சொல்லுங்கள்:
“உங்களுடைய செயல்கள் எவ்வளவு பிரமிப்பானவை!+
உங்களுடைய மகா வல்லமையைக் கண்டு
எதிரிகள் உங்கள்முன் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+
4 பூமியிலுள்ள எல்லாரும் உங்கள்முன் தலைவணங்குவார்கள்.+
உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள்.
உங்கள் பெயரைப் புகழ்ந்து பாடுவார்கள்.”+ (சேலா)
5 கடவுளுடைய செயல்களை வந்து பாருங்கள்.
மனிதர்களுக்காக அவர் செய்யும் செயல்கள் பிரமிப்பானவை.+
அங்கே அவரை நினைத்து நாம் சந்தோஷப்பட்டோம்.+
7 அவர் தன்னுடைய வல்லமையால் என்றென்றும் ஆட்சி செய்கிறார்.+
அவருடைய கண்கள் தேசங்களை எப்போதும் கவனிக்கின்றன.+
வறட்டுப் பிடிவாதமுள்ளவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ளக் கூடாது.+ (சேலா)
10 கடவுளே, எங்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள்.+
வெள்ளியைப் புடமிடுவது போல எங்களைப் புடமிட்டிருக்கிறீர்கள்.
11 வேடனுடைய வலையில் எங்களைச் சிக்க வைத்தீர்கள்.
பயங்கரமான பாரத்தை எங்கள்மேல் சுமத்தினீர்கள்.
12 அற்ப மனுஷன் எங்களை ஏறி மிதிக்க* விட்டுவிட்டீர்கள்.
நாங்கள் தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்.
பின்பு, நிம்மதியான இடத்துக்கு எங்களைக் கொண்டுவந்தீர்கள்.
13 உங்களுடைய ஆலயத்துக்குத் தகன பலிகளோடு நான் வருவேன்.+
என் நேர்த்திக்கடன்களை உங்களுக்குச் செலுத்துவேன்.+
14 இக்கட்டில் தவித்தபோது என் உதடுகளால் சொன்னதையும்,
என் வாயினால் வாக்குக் கொடுத்ததையும் நிறைவேற்றுவேன்.+
15 கொழுத்த மிருகங்களை உங்களுக்குத் தகன பலியாகக் கொடுப்பேன்.
செம்மறியாட்டுக் கடாக்களை நெருப்பில் பலி செலுத்துவேன்.
காளைகளையும் வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுப்பேன். (சேலா)
16 கடவுளுக்குப் பயப்படுகிறவர்களே, எல்லாரும் வந்து கேளுங்கள்.
அவர் எனக்குச் செய்ததையெல்லாம் சொல்கிறேன்.+
17 என் வாயினால் அவரைக் கூப்பிட்டேன்.
என் நாவினால் அவரை மகிமைப்படுத்தினேன்.