சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டியது. ஆசாப்பின்+ சங்கீதம். ஒரு பாடல்.
3 தீ பறக்கும் அம்புகளை அவர் அங்கே முறித்துப் போட்டார்.
கேடயத்தையும் வாளையும் போர்க் கருவிகளையும் உடைத்துப் போட்டார்.+ (சேலா)
4 கடவுளே, நீங்கள் பிரகாசமாக ஒளிவீசுகிறீர்கள்.*
காட்டு மிருகங்கள் வாழ்கிற மலைகளைவிட கம்பீரமாக இருக்கிறீர்கள்.
5 நெஞ்சத்தில் துணிச்சல் உள்ளவர்கள் சூறையாடப்பட்டார்கள்.+
7 நீங்கள் மட்டுமே பயபக்திக்குரியவர்.*+
உங்களுடைய கடும் கோபத்தை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்?+
8 பரலோகத்திலிருந்து உங்கள் தீர்ப்பை அறிவித்தீர்கள்.+
அப்போது, பூமி பயந்து அடங்கியது.+
9 ஏனென்றால், தன்னுடைய தீர்ப்பை நிறைவேற்ற கடவுள் எழுந்து வந்தார்.
பூமியிலிருக்கிற தாழ்மையான* எல்லாரையும் காப்பாற்ற அவர் எழுந்து வந்தார்.+ (சேலா)
10 மனிதர்களுடைய கடும் கோபம் உங்களுக்குப் புகழ் உண்டாக்கும்படி நீங்கள் செய்வீர்கள்.+
அவர்களிடம் எஞ்சியிருக்கிற கொஞ்சநஞ்ச கோபமும்கூட உங்களுக்கு மகிமை உண்டாக்கும்படி* செய்வீர்கள்.
11 உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் நேர்ந்துகொண்டு, அதை நிறைவேற்றுங்கள்.+
அவரைச் சுற்றியிருக்கிற எல்லாரும் பயபக்தியோடு தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்.+
12 தலைவர்களுடைய கர்வத்தை அவர் அடக்குவார்.
பூமியிலுள்ள ராஜாக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்துவார்.