சங்கீதம்
வீட்டின் திறப்பு விழாவின்போது தாவீது பாடிய சங்கீதம்.
30 யெகோவாவே, நீங்கள் என்னைக் கைதூக்கிவிட்டதால் உங்களை மகிமைப்படுத்துவேன்.
எதிரிகள் என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க நீங்கள் விடவில்லை.+
2 என் கடவுளாகிய யெகோவாவே, உதவிக்காக உங்களிடம் கெஞ்சினேன். நீங்கள் என்னைக் குணப்படுத்தினீர்கள்.+
3 யெகோவாவே, கல்லறையிலிருந்து என்னைக் கைதூக்கிவிட்டீர்கள்.+
என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; சவக்குழியில் புதைந்துவிடாமல் என்னைப் பாதுகாத்தீர்கள்.+
4 யெகோவாவுக்கு உண்மையோடு* இருப்பவர்களே, அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+
அவருடைய பரிசுத்தமான பெயருக்கு+ நன்றி சொல்லுங்கள்.
சாயங்காலத்தில் அழுகை இருந்தாலும், காலையில் சந்தோஷ ஆரவாரம் உண்டாகும்.+
6 நான் நிம்மதியாக இருந்த காலத்தில்,
“நான் அசைக்கப்படவே* மாட்டேன்” என்று சொன்னேன்.
7 யெகோவாவே, நீங்கள் எனக்குக் கருணை* காட்டியபோது, என்னை மலைபோல் உறுதியாக நிற்க வைத்தீர்கள்.+
ஆனால், உங்களுடைய முகத்தை மறைத்துக்கொண்டபோது, நான் கதிகலங்கிப்போனேன்.+
8 யெகோவாவே, உங்களிடம் வேண்டிக்கொண்டே இருந்தேன்.+
கருணை காட்டச் சொல்லி நான் யெகோவாவிடம் கெஞ்சிக்கொண்டே இருந்தேன்.
9 நான் செத்துப்போவதால் என்ன பிரயோஜனம்? நான் சவக்குழிக்குள் போவதால் என்ன லாபம்?+
தூசியால் உங்களைப் புகழ முடியுமா?+ நீங்கள் எவ்வளவு நம்பகமானவர்* என்பதைச் சொல்ல முடியுமா?+
10 யெகோவாவே, என் வேண்டுதலைக் கேட்டு, எனக்குக் கருணை காட்டுங்கள்.+
யெகோவாவே, எனக்குத் துணையாக இருங்கள்.+