எமது வாசகரிடமிருந்து
புதிய சகாப்தம் புதிய சகாப்த இயக்கம் என்பதன் பேரில் பிரசுரித்த தொடர் கட்டுரைகளுக்காக உங்களுக்கு மிக்க நன்றி. (மார்ச் 8, 1994) அடையாளங் கண்டுணரப்படாத பறக்கும் பொருட்கள், நில உலகுக்குப் புறம்பான வாழ்க்கை, மறு பிறப்பு ஆகியவற்றின் பேரில் இருந்த தகவலை நான் முன்பு ஆராய்ந்தேன். யோகா, தியானம், ஆழ்ந்த அறிதுயில் நிலையை உட்படுத்திய சிகிச்சை முறை ஆகியவற்றில் நான் பயிற்சி பெற்றேன். இறுதியில் நான் ஆவி, மனம், உணர்ச்சி, சரீரம் ஆகியவை சம்பந்தப்பட்ட வினைமையான பிரச்னைகளை எதிர்ப்பட்டேன், பிசாசுகளின் பிடிப்புக்குள்ளும்கூட வந்தேன். நான் அதிகமாக விரும்பிய மனோராஜ்யம் எப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிக தூரமாய் இருந்தது போல் தோன்றியது. ஐந்தரை வருடங்களுக்குப் பிறகு, புதிய சகாப்த இயக்கத்தின் இருளிலிருந்து விடுதலைப் பெற்று, இப்போது நான் யெகோவாவை சேவித்து வருகிறேன்.
E. D., நெதர்லாந்து
ஒரு கிறிஸ்தவனாக ஆவதற்கு முன்பு, புதிய சகாப்த சிந்தனையோடும் வாழ்க்கை முறையோடும் நான் ஈடுபட்டிருந்தேன். என்னுடைய இளைய சகோதரி, புதிய சகாப்தத்தை ஆதரிக்கும் தொகுதியினரோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தன் விருப்பத்தை சமீபத்தில் தெரிவித்தாள். ஆகையால் நான் அவளோடு சேர்ந்து இந்தக் கட்டுரையை சிந்தித்தேன். தியானத்தால் கடவுளைக் காணலாம் என்ற கொள்கையோடும் மாயமந்திரத்தோடும் புதிய சகாப்தத்துக்கு உள்ள தொடர்பைப் பற்றிக் கேள்விப்பட்ட போது அவள் திடுக்கிட்டாள். இப்போது அவள் புதிய சகாப்த சிந்தனையிலிருந்து விலகியிருக்க தீர்மானமாய் இருக்கிறாள்.
L. S., இங்கிலாந்து
உங்களுடைய கட்டுரையின் ஆரம்பம் நன்றாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு உடனடியாக “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல” என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இறுதியில், புதிய சகாப்த நம்பிக்கைகள் இன்னும் கூடுதலான இருளைத் தான் கொண்டு வரும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நாம் எல்லா கருத்தியல் நோக்குநிலைகளையும் தள்ளி விட்டு எல்லா காரியங்களும் திறம்பட்டதாக தீர்ந்து விடும் என்று வெறுமனே நம்பிக்கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா? தனக்காக மேம்பட்ட ஓர் உலகை உருவாக்கிக் கொள்வது மனிதனாலே கூடாத காரியம் என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வருகிறீர்கள்?
A. L., ஐக்கிய மாகாணங்கள்
“விழித்தெழு!” பத்திரிகை அல்ல—பைபிள் தான் “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல” என்று சொல்கிறது. (எரேமியா 10:23) புதிய சகாப்தத்தைக் கொண்டு வருவதற்கு மனிதர்கள் எடுக்கும் முயற்சிகள் பயனற்றவை. என்றாலும்கூட மெய்க் கிறிஸ்தவர்கள் இன்றைய பிரச்னைகளைப் புறக்கணிப்பதில்லை. கடவுளுடைய வார்த்தையின் நியமங்களை மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம், இலட்சக்கணக்கானோர் ‘தங்களுக்கு பயன் வருவித்துக் கொள்ள’ யெகோவாவின் சாட்சிகள் உதவியிருக்கின்றனர்—பொருள் சம்பந்தமான தேவைகள், சரீர சம்பந்தமான தேவைகள், ஆவிக்குரிய தேவைகள். (ஏசாயா 48:17; மத்தேயு 28:19, 20) அதே சமயத்தில், வரப்போகும் “புதிய வானங்களும் புதிய பூமியும்” பற்றிய மெய்யான நம்பிக்கையை நாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்—அது கடவுளால் கொண்டு வரப்படப் போகிறது, மனிதனால் அல்ல. (2 பேதுரு 3:13)—ED.
இரட்டை வாழ்க்கை இரட்டை வாழ்க்கை நடத்துவதைப் பற்றிய உங்கள் கட்டுரைகள் (டிசம்பர் 22, 1993, ஜனவரி 8, 22, 1994) எங்களுடைய மகன் நான்கு வருடத்துக்கும் மேலாக செய்து கொண்டிருந்த ஒரு பாவத்தை வெளிப்படையாக சொல்வதற்கு உந்துவித்தது. அவன் சிறந்த ஆவிக்குரிய முன்னேற்றத்தை செய்து கொண்டிருப்பது போல் வெளித் தோற்றத்துக்குக் காணப்பட்டான். இந்தப் பாவத்தைக் குறித்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து கடும் வெறுப்பு கொண்டோம், ஆனால் உங்களுடைய கட்டுரைகளின் காரணமாக எங்களால் அன்போடும் மன்னிக்கும் தன்மையோடும் அதற்கு பிரதிபலிக்க முடிந்தது.
J. P., ஐக்கிய மாகாணங்கள்
நான் ஒரு வருடத்துக்கும் மேலாக கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவு கொள்வதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் அக்கட்டுரைகள் உண்மையிலேயே உற்சாகமூட்டுவதாயும் அன்பு நிறைந்ததாயும் இருந்தன. நீங்கள் சொன்னபடி, ஜெபத்தில் யெகோவாவை அணுகுவது முதற்படி. அதைச் செய்வது மிகவும் கடினம், ஆனால் அது எனக்கு பெருத்த ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
M. G., பிரான்ஸ்
இளைஞர் இரத்தமேற்றுதல்களைத் தடுக்கின்றனர் எனக்கு வயது 12, “கடவுளை முதன்மையாக வைத்த இளைஞர்” என்ற தொடர் கட்டுரைகளை இப்போது தான் படித்து முடித்தேன் (மே 22, 1994) யெகோவாவிலும் உயிர்த்தெழுதலிலும் பெரும் நம்பிக்கையை வைத்து மரணத்தை எதிர்ப்பட்ட அந்த இளம் கிறிஸ்தவ சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. யெகோவாவின் பேரில் அவர்களுக்கு இருந்த தைரியமும் விசுவாசமும் என்னை ஆனந்தத்தால் கண்ணீர் வடிக்க வைத்தது.
B. C. R., ஸ்பெய்ன்