பாடல் 110
கடவுளுடைய அதிசய செயல்கள்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தே-வா, என்-னை நன்-க-றி-வீ-ரே!
எந்-தன் சிந்-தை நீர் ஆ-ராய்-கி-றீ-ரே;
எந்-தன் சொல்-லை, செ-ய-லை அ-றி-வீ-ரே,
என் ஒவ்-வொ-ரு அ-சை-வை-யும்
உ-ணர்-வீ-ரே.
என்-னைக் க-ரு-வில் நீர் கண்-டீ-ரே,
எ-லும்-பெல்-லாம் தோன்-றி-டும் முன்-ன-ரே,
என் உ-ரு-வை உம் ஏட்-டில் வ-டித்-தீ-ரே,
உம் கை-வண்-ணத்-தை வா-யா-ரப்
பு-கழ்-வே-னே.
யெ-கோ-வா-வே, உம் ஞா-னம் ஈ-டற்-ற-தே,
அ-தை எந்-தன் நெஞ்-சம்-தான் போற்-று-தே.
கா-ரி-ருள் என்-னைச் சூழ்ந்-து-கொண்-டா-லு-மே,
உம் சக்-தி என்-னைக் கண்-ட-றி-யு-மே;
எல்-லாம் வெ-ளிச்-சம் உம் கண் முன்-னே,
நான் எங்-கு-தான் போ-னா-லும் காண்-பீ-ரே;
ம-லை-யி-லோ, மண்-ணி-லோ, க-ட-லி-லோ
உம் கண் எட்-டா-த இ-ட-மொன்-றும்
இல்-லை-யே!
(காண்க: சங். 66:3, 4; 94:19; எரே. 17:10.)