பாடல் 94
தேவனின் பரிசுகளில் திருப்தி காண்போம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. நல்-ல நல்-ல ப-ரி-செல்-லாம்
யெ-கோ-வா-வின் ஈ-வே!
ஆ-சை ஆ-சை-யா-ன-தெல்-லாம்
தந்-தை அ-வர் ஈ-வே!
நித்-தம் நித்-தம் மா-றா-த-வர்,
நித்-ய மா-ரா-ஜா-வே!
அள்-ளி அள்-ளி த-ரும் வள்-ள-லே,
அ-கி-லம் தந்-த-வர்!
2. ‘அ-து இல்-லை இ-து இல்-லை’
ஏங்-க வேண்-டா-மே நாம்!
பட்-சி ப-ற-வை காப்-ப-வர்
நம்-மை ம-றப்-பா-ரோ?
‘போ-தும் போ-தும்!’ என்-னும்-வ-ரை
பி-தா பொ-ழி-வா-ரே!
சொத்-து-பத்-து தே-டி அ-லை-யோம்,
எ-ளி-மை-யாய் வாழ்-வோம்.
3. வேண்-டாம் வேண்-டாம் ப-கட்-டெல்-லாம்;
தே-வன் கண்-ணில் வீ-ணாம்!
சேர்ப்-பீர் சேர்ப்-பீர் நல்-ல பே-ரை
அ-வர் வங்-கி-யி-லே!
தி-னம் தி-னம் தே-வ சே-வை
தீர்க்-கா-யுள் த-ரு-மே!
‘போ-தும்!’ ‘போ-தும்!’ என்-ற ம-ன-மே
பொன் செய்-யும் ம-ருந்-தே!
(காண்க: எரே. 45:5; மத். 6:25-34; 1 தீ. 6:8; எபி. 13:5.)