பாடம் 4
யெகோவாவையும் அப்பாவையும் சந்தோஷப்படுத்தினாள்
படத்தில இருக்கிற பொண்ணு யார் தெரியுமா?— அவளோட பேரு பைபிள்ல இல்லை. அவளோட அப்பா பேரு யெப்தா. அவள் யெகோவாவுக்கும் அவளோட அப்பாவுக்கும் பிடிச்ச மாதிரி நடந்துகிட்டா. அவளைப் பத்தியும் அவளோட அப்பாவைப் பத்தியும் இப்போ படிக்கலாமா?
யெப்தா ரொம்ப நல்லவர். யெகோவாவைப் பத்தி அவரோட பொண்ணுக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். அவர் ரொம்ப பலசாலி. நல்ல தலைவர். அதனால இஸ்ரவேல் மக்கள் அவர்கிட்ட போய், ‘எதிரிகளோட நாங்க சண்டை போட போறோம். நீங்களும் எங்ககூட வாங்க’னு சொன்னாங்க.
உடனே யெகோவாகிட்ட யெப்தா ஜெபம் செய்தார். ‘சண்டையில நாங்க ஜெயிக்கணும். எங்களுக்கு உதவி செய்யுங்க’னு கேட்டார். ‘ஜெயிச்சா, சண்டை முடிஞ்சி நான் வீட்டுக்கு வரும்போது, யாரு முதல்ல வீட்டிலிருந்து வெளியே வராங்களோ, அவங்கள உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். அவங்க உங்களுக்கு வேலை செய்வாங்க’னு யெகோவாகிட்ட சொன்னார். அவங்க எங்கே வேலை செய்வாங்க? ஆசரிப்புக் கூடாரத்தில வேலை செய்வாங்க. கடைசிவரை அங்கதான் இருப்பாங்க. கடவுளை வணங்குற இடம்தான் ஆசரிப்புக் கூடாரம். யெப்தா செஞ்ச ஜெபத்தை யெகோவா கேட்டார். அவருக்கு உதவி செய்தார். அதனால யெப்தா ஜெயிச்சிட்டார். யெப்தா வீட்டுக்கு வந்தப்போ முதல்ல வெளியே வந்தது யார் தெரியுமா?—
யெப்தாவோட பொண்ணு! அவரோட ஒரே செல்ல பொண்ணு ஓடி வந்தாள். யெப்தாவுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஏன்னா, இப்போ அவளை ஆசரிப்புக் கூடாரத்துக்கு அனுப்பிடணுமே. ஆனா, அவரோட பொண்ணு என்ன சொன்னாள் தெரியுமா? ‘அப்பா, நீங்க யெகோவாகிட்ட சொல்லிட்டீங்க, இல்லையா? அதனால நான் ஆசரிப்புக் கூடாரத்துக்கு போறேன்’னு சொன்னாள்.
அவளுக்கும் கவலையாதான் இருந்தது. ஆசரிப்புக் கூடாரத்துக்கு போயிட்டா, அவள் கல்யாணம் பண்ணிக்க முடியாது; குழந்தை பெத்துக்க முடியாது. இருந்தாலும், அவளோட அப்பா சொன்னதைச் செய்ய ஆசைப்பட்டாள். அப்போதான் யெகோவா சந்தோஷப்படுவார்னு அவளுக்குத் தெரியும். கல்யாணம், குழந்தையைவிட இதுதான் முக்கியம்னு நினைச்சாள். அதனால வீட்டிலிருந்து போய், கடைசிவரை ஆசரிப்புக் கூடாரத்தில வேலை செய்தாள்.
அவள் செய்ததைப் பார்த்து யெகோவாவும் அவளோட அப்பாவும் சந்தோஷப்பட்டிருப்பாங்க இல்லையா?— நீ எப்படி யெப்தாவோட பொண்ணு மாதிரி நடந்துக்கலாம்? அப்பா-அம்மா பேச்சை கேக்கணும்; யெகோவாவுக்குப் பிடிச்ச மாதிரி நடக்கணும். அப்படி செஞ்சா, அப்பா-அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். யெகோவாவும் சந்தோஷப்படுவார்.