ஏன் அந்த வெறுப்புக் குறிப்புகள்?
இங்கிலாந்தில் விழித்தெழு! பத்திரிகை வாசகர் ஒருவர், ஏன் சிலர் அதைப்பற்றி இத்தகைய வெறுப்புக் குறிப்புகளைச் சொல்கின்றனரென அதிசயித்து, பின்வருமாறு விளக்கினார்:
“நான் உங்கள் விசுவாசத்தில் இராவிடினும், உங்கள் பத்திரிகையின் நுண்ணறிவின்பேரிலும் தெளிவின்பேரிலும் இடைவிடாமல் மனக்கவர்ச்சியடைகிறேன்.
“என் வீட்டுக்கு வருகிறவர்கள், அதன் ஒரு பிரதியை ஓரிடத்தில் கிடப்பதைப் பார்க்கையில், வெறுப்புக் குறிப்புகள் சொல்வது எனக்கு அடிக்கடி ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஒருவேளை விழித்தெழு! நம்மைப் பற்றிய மிகப் பல ‘வீட்டு உண்மைகளை’ உள்ளதை உள்ளபடியே எடுத்துரைப்பதனால் இருக்குமா?
“சென்ற ஆண்டில் மதுபானத்தின்பேரில் எழுதின உங்கள் கட்டுரைகளில் நான் முக்கியமாய் அக்கறைக்கொண்டேன், குடிகாரனாக முன்பிருந்த எனக்கு, மதுபானம் ‘பாம்பைப்போல்’ மாறுவதைப் பற்றி பைபிளிலிருந்து எடுத்துரைத்தது. அந்தப் புத்தகத்தின் ஞானத்தை மறுபடியும் ஒரு முறையாக எனக்கு உறுதிப்படுத்துகிறது.”
நீங்களும் விழித்தெழு!-வினால் மனங்கவரப்படுவீர்கள். காரியங்களின் மேற்புறத்துக்கு அடியில் ஆழமாய்க் கூர்ந்தாராய்கிறது, விளம்பரம் செய்பவர்களுக்கு அஞ்சாமல், அது உண்மைகளை உள்ளபடி பிரசுரிக்க சுயாதீனமுள்ளது. ஏனெனில் வரி விளம்பரங்கள் இப்பத்திரிகையில் கிடையாது. 53 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வாசித்துவரும் இந்தப் பத்திரிகையை நீங்களும் அனுபவித்து மகிழ்வீர்கள்.
விழித்தெழு! பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா தயவுசெய்து அனுப்புங்கள். இந்தப் பத்திரிகையின் 12 வெளியீடுகளுக்கு ரூ.18/. இத்துடன் அனுப்புகிறேன்.