யூதேயா—வனாந்தரம் வறண்டது ஆனால் கவர்ச்சியானது
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் யூதேயா வனாந்தரம், எவ்விதமாக இருப்பதாய் நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்? சிலர் அதை ஒரு விசாலமான அடர்த்தியான காடு என நினைக்கிறார்கள். மற்றவர்கள் எல்லையில்லா மணற்பரப்பைக்கொண்ட சகாரா போன்ற ஒரு பாலைவனத்தைக் கற்பனை செய்கிறார்கள்
மேலேயுள்ள புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் வண்ணமாக, இவ்விரண்டு கற்பனையுமே இந்த வனாந்தரத்துக்கு நிகராக இல்லை. இந்தக் கோணத்தில், நீங்கள் இயேசுவோடு சம்பந்தப்பட்ட வனாந்தரத்தின் ஒரு பகுதியைப் பார்க்கிறீர்கள். வனாந்தரத்தின் ஓரத்தில் அமையப்பெற்று, கிழக்கே யோர்தான் பள்ளத்தாக்கிலுள்ள, புல்லின மரங்களால் அணிசெய்யப்பட்ட எரிகோ நகரத்தை மேலிருந்து நோக்கும் வண்ணமாக இருக்கும் இந்த உச்சியிலிருந்துதானே சாத்தான் இயேசுவுக்கு “உலகத்தின் சகல ராஜ்யங்களையும்” காண்பித்ததாகப் பாரம்பரியம் குறிப்பிடுகிறது.—மத்தேயு 3:1; 4:1–11.
இந்த வடகிழக்குப் பகுதியிலிருந்து, யூதேயா வனாந்தரம் சவக்கடலின் மேற்குப் பக்கத்தினூடாக கீழே பரந்துகிடக்கிறது. 1989 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியிலுள்ள மேல் அட்டை வரைபடத்தைப் பார்ப்பீர்களேயானால், இந்தப் பகுதியை கற்பனை செய்து பார்க்க உங்களுக்கு அது உதவியாக இருக்கும். (நாட்காட்டியில், மேலே காணப்படும் படத்தின் பெரிய உருவப் படமும் காணப்படுகிறது.) (10-லிருந்து 15 மைல்கள் அகலமுள்ள) வனாந்தரம் யூதேயா மலையின் கிழக்குச் சரிவில் சவக்கடல் கரையோரம் வரையாக இருக்கிறது.
அந்த மலைகள் மத்தியதரைக் கடலிலிருந்துவரும் பெரும்பகுதியான ஈரத்தை தடைசெய்துவிடுகின்றன. ஆகவே, கிழக்கேயுள்ள மென்மையான தேய்ந்து போன சுண்ணாம்புக் குன்றுகள், குளிர் மாதங்களாகிய நவம்பர் மற்றும் டிசம்பர் தவிர மற்றபடி மழையைப் பெற்றுக்கொள்வதில்லை. அந்தச் சமயத்தில், புற்கள் வளர, ஆடுகள் அங்கே மேய்கின்றன. இவ்விதமாக, 1 சாமுவேல் 24:3-ல் குறிப்பிடப்பட்டுள்ள “வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்கள்” இந்தப் பகுதிக்குத் துல்லிபமாகப் பொருந்துகின்றது.
அங்கே வளரும் புற்கள் நெடுநாள் இருப்பதில்லை. பாலைவனத்திலிருந்து வரும் கீழ்க்காற்று பசுமை நிறத்தை வாடிய பழுப்பு நிறமாக்கிவிடுகிறது. தீர்க்கதரிசனக் கூற்றை இது எவ்வளவு நேர்த்தியாக விளக்குகிறது: “புல் உலர்ந்து, பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”—ஏசாயா 40:8; 1 பேதுரு 1:24, 25.
ஒருவேளை இயேசு 40 நாட்கள் இரவும் பகலுமாக இந்த வனாந்தரத்தில் சுற்றித் திரிந்தபோது இந்த வசனத்தை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். மரங்களில்லாதப் பாதைகளிலும் மலையிடுக்கு வழிகளிலும் வாட்டும் உஷ்ணத்தில் இயேசு எவ்விதமாக உணர்ந்திருப்பார் என்பதைப் பற்றிச் சிந்தித்துப்பாருங்கள். (ஏசாயா 32:2) அதற்குப்பின் “தேவதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை” செய்தது எத்தனை பொருத்தமானதாக இருக்கிறது!—மத்தேயு 4:1–11.
யூதேய வனாந்தரம் வறண்டதாகவும் குடியிருப்பில்லாததாகவும் இருந்தபடியால், அது அநேகமாக ஒரு புகலிடமாக பயன்படுத்தப்பட்டது. மூர்க்கமாயிருந்த சவுல் அரசனிடமிருந்து ஓடி ஒளிகையில் தாவீது அங்கே பாதுகாப்பைக் கண்டான். இதை அவன் “வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலம்” என்பதாக அழைக்கிறான். (சங்கீதம் 63:1-ம் மேற் குறிப்பும்; 1 சாமுவேல் 23:29) கொஞ்ச காலத்துக்கு அவன் வாடி காரேட்டனில் (பெத்லகேமின் கிழக்கிலிருந்து சவக்கடலை நோக்கிப் பரவியிருக்கும் ஒரு பள்ளத்தாக்கு) உம் குவாட்டஃபா குகைப் போன்ற ஒரு குகையில் ஒளிந்திருந்தான். குகையிலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் கோணத்தில், அங்குமிங்குமுள்ள தாவரங்களுக்காகத் தேடிக்கொண்டிருக்கும் ஒருசில கருப்பு ஆடுகளை கீழே வலது பக்கத்தில் நீங்கள் காணலாம்.
சவுல் இயல்பான நிலைக்கு வந்தபோது, தாவீது என்கேது என்ற பகுதியிலுள்ள ஒரு குகையிலிருந்தான். தாவீது சவுலின் சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்ட போதிலும், அவன் “யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு” தீங்கிழைக்கக்கூடாதவனாயிருந்தான். தாவீது பின்னர், அரசன் கீழே இறங்கிவந்து ஏராளமான கிளைகளின் மத்தியிலிருக்கையில் சவுலை சந்தித்தான். (1 சாமுவேல் 24:1–22) ‘இங்கே ஏராளமான கிளைகளா?’ என்பதாக நீங்கள் யோசிக்கலாம்.
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
Three pragraphs are in archives