உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகள் நடைமுறையான மதிப்புடையதாய் உங்களுக்கு இருந்ததா? அப்படியானால் உங்கள் ஞாபக சக்தியை பின்வருபவற்றைக் கொண்டு ஏன் பரீட்சித்துப் பார்க்கக்கூடாது?
◻ மத்தேயு 25:34-ல் இயேசு செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களிடமாக, “உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” என்பதாகச் சொல்கிறபோது அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்?
இந்தச் செம்மறியாடுகளைப் போன்ற ஆட்கள் தம்மோடு பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள் என்பதை இயேசு அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, செம்மறியாடுகள், மீட்டுக் கொள்ளப்படத்தக்க மனிதவர்க்கத்துக்காக, “உலகம் உண்டானது முதல்” ஆயத்தம் பண்ணப்பட்டதாயிருக்கும் ராஜ்யத்தின் பூமிக்குரியப் பகுதியைச் சுதந்தரித்துக் கொள்வர். இவ்விதமாக இவர்கள், தங்களுடைய “நித்திய பிதா”வாகிய ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் பூமிக்குரியப் பிள்ளைகளாக ஆகிறார்கள். (ஏசாயா 9:6, 7)—5/1, பக்கம் 17.
◻ பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேவுக்கு முன் மரித்த உண்மையுள்ளவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில், அவர்களை வரவேற்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் பூமியில் உயிரோடிப்பது அவசியமாக இருக்குமா?
இல்லை, இது அவசியமாயிராது. மகா உபத்திரவத்தைத் தப்பிப் பிழைக்கும் திரள் கூட்டத்தாரில் அநேகர் இப்பொழுதே அமைப்பு சம்பந்தமான பொறுப்புகளை கவனிக்கப் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள். ஆகவே, அவர்கள் அந்த நிலைமையைச் சமாளிப்பதற்கும், உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களுக்கு “புதிய வானங்களின்” கீழ் “புதிய பூமியை” அறிமுகஞ்செய்து வைக்கவும் கூடியவர்களாக இருப்பர். (2 பேதுரு 3:13)—5/1, பக்கங்கள் 17, 18.
◻ யெகோவாவின் சாட்சிகள் ஏன் உலக முழுவதிலும் பகைக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வந்த போதிலும் சோர்வடைந்துவிடுவதோ அல்லது மனம் தளர்ந்துவிடுவதோ இல்லை?
இப்படிப்பட்ட பகையும் எதிர்ப்பும், உண்மையான வணக்கத்தாரின் அடையாள குறியாக இருக்கும் என்பதாக இயேசு முன்னறிவித்தார். (யோவான் 15:20, 21; 2 தீமோத்தேயு 3:12) ஆகவே நற்செய்தியை அறிவிப்பவர்கள், அவர்களுக்குத் தெய்வீக அங்கீகாரம் இருக்கிறதென்று மறுஉறுதியளிக்கப்பட்டிருக்கின்றனர். மேலுமாக, யெகோவாவின் சாட்சிகள் மகா உன்னதமான கடவுளாகிய யெகோவாவின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள்.—6/1, பக்கம் 21.
◻ விவாக துணைவர்கள் சமநிலையாக பிணைக்கப்படுகையில் என்ன நன்மைகள் இருக்கின்றன?
கடவுளுக்குத் தங்களுடைய வணக்கத்தின் சம்பந்தமாக, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். மேலும் தங்கள் வேறுபாடுகளைத் தீர்க்க வழிநடத்துதலுக்காக இருவரும் வேதாகமத்தைப் பார்க்கலாம்.—6/1, பக்கம் 12.
◻ நமக்கு யெகோவா கிடைக்கப்பெறச் செய்யும் உட்பார்வையிலிருந்து நன்மையடைய நம் பங்கில் என்ன மூன்று காரியங்கள் தேவைப்படுகின்றன?
யெகோவாவின் அமைப்பை நாம் மதித்துணருவது அவசியமாகும்; கடவுளுடைய வார்த்தையையும் அதைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவிசெய்யும் ஏதுக்களையும் ஒழுங்காகப் படிக்க வேண்டும்; நாம் கற்றுக்கொண்டிருக்கும் காரியங்களையும், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இதை எவ்விதமாகப் பொருத்தலாம் என்பதையும் நாம் தியானிக்க வேண்டும்.—7/1, பக்கம் 26.
◻ பூர்வ இஸ்ரவேல் மக்கள் ஏன் அத்தனை உட்பார்வையற்றவர்களாக நடந்துகொண்டனர்?
யெகோவா அவர்களுக்காகச் செய்திருந்த அனைத்து காரியங்களின் மேல் போற்றுதலோடு சிந்தையாயிருக்க அவர்கள் தவறினர். (சங்கீதம் 106:7, 13)—8/1, பக்கம் 7.
◻ “தேவபக்தி” என்பது என்ன? (1 தீமோத்தேயு 3:16)
தேவபக்தி கடவுளிடமாக அவருடைய சர்வலோக அரசுரிமைக்கு இராஜபக்தியோடுகூடிய பயபக்தி, வணக்கம் மற்றும் சேவையாக இருக்கிறது.—8/1, பக்கம் 15.
◻ 2 தெசலோனிக்கேயர் 2:3-ல் பவுல் குறிப்பிடும் அந்தக் “கேட்டின் மகனாகிய பாவமனுஷன்” யார்?
பவுல் தனிப்பட்ட ஒருவரைப் பற்றிப் பேசிக்கொண்டில்லை. ஏனென்றால் அந்த “மனுஷன்” பவுலின் நாட்களிலே இருந்திருக்கிறான் என்றும் இந்த ஒழுங்குமுறையின் முடிவில் யெகோவா அவனை அழிக்கும்வரை தொடர்ந்து இருப்பான் என்றும் அவன் குறிப்பிடுகிறான். ஆகவே “கேட்டின் மகனாகிய பாவ மனுஷன்” அடையாள அர்த்தமுள்ள சொற்றொடராகும். ஆதாரம் காண்பிக்கும் வண்ணமாக இவர்கள் பெருமையான, பேராசையான திட்டங்களைக் கொண்ட கிறிஸ்தவ மண்டல குருவர்க்க வகுப்பினராக, பல நூற்றாண்டுகளாகத் தங்களையே சட்டமாக வைத்துக்கொண்டவர்களாயிருக்கின்றனர்.—9/1, பக்கம் 13.
◻ பைபிள் கைப்பிரதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான வேறுபாடுகள் கடவுளுடைய வார்த்தை என்ற பைபிளின் உரிமைப்பாராட்டலின் வலிமையைக் குறைத்துவிடுகிறதா?
இல்லை. பைபிள் பண்டிதர்கள், இந்த எல்லா வேறுபாடுகளும் வாசகத்துக்கு எந்த முக்கியத்துவமற்றவை என்று நமக்குச் சொல்லுகிறார்கள். வேதவாக்கியங்களின் நம்பத்தக்கத்தன்மையின் அத்தாட்சியை வலுப்படுத்தவே அவை உதவுகின்றன. (சங்கீதம் 119:105; 1 பேதுரு 1:25)—10/1, பக்கங்கள் 30, 31.
◻ தாலந்துகளைப் பற்றிய இயேசுவின் உவமையில், தாலந்துகளைப் பயன்படுத்துவது என்பதன் மூலம் அர்த்தப்படுத்தப்படுவது என்ன? (மத்தேயு 25:19–23)
தாலந்துகளைப் பயன்படுத்துவது என்பது கடவுளுக்காக ஸ்தானாதிபதிகளாகச் செயல்பட்டு, சீஷர்களை உண்டுபண்ணி, தேவனுடைய வீட்டாருக்கு ஆவிக்குரிய சத்தியங்களை பகிர்ந்தளிப்பதை அர்த்தப்படுத்தியது. (மத்தேயு 24:45; 28:19, 20; 2 கொரிந்தியர் 5:20)—10/1, பக்கம் 13.
◻ மற்ற எல்லாப் புத்திமதிகளின் ஊற்றுமூலங்களோடு ஒப்பிட, என்ன மூன்று அம்சங்களில் பைபிள் ஈடிணையற்றதாக இருக்கிறது?
முதலாவது, அதன் புத்திமதி எப்போதும் பிரயோஜனமுள்ளது. (சங்கீதம் 93:5) இரண்டாவதாக, பைபிள் காலத்தின் சோதனையை வென்று வந்திருக்கிறது. (ஏசாயா 40:8; 1 பேதுரு 1:25) மூன்றாவதாக, பைபிள் புத்திமதியின் விரிவான செயல் எல்லை ஒப்பற்றதாகும். நாம் எதிர்ப்படும் பிரச்னை அல்லது தீர்மானம் எதுவாக இருப்பினும், அதைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவி செய்யும் ஞானம் பைபிளில் இருக்கிறது.—11/1, பக்கம் 20.