நம்பிக்கையை ஆதரிக்கும் குரல்கள்
கடந்த நூற்றாண்டு முடிவுக்கு வந்தபோது, அறிவியல், தத்துவம், மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை ஆதரித்து தெரிவிக்கப்பட்ட குரல்கள், கடவுள் நம்பிக்கையின் மீதும் பைபிள் ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டது என்பதன் மீதும் கேடுவிளைவிக்கும் பாதிப்பைக் கொண்டுவந்திருக்கின்றன.
ஆனால் தெரிவிக்கப்பட்ட குரல்கள் இவை மாத்திரமல்ல. நாத்திகத்தைவிட கடவுள் நம்பிக்கைக்கு ஆதரவாக நிறைய சொல்ல முடியும் என்பதை அநேக ஆய்வாளர்கள் கண்டனர். இந்த ஆய்வுகளும்கூட பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை என்பதற்கு ஏராளமான சான்றுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.
இந்த விஷயத்தின்பேரில், கருத்து தெரிவித்த பிரபலமான ஒருவர் C. T. ரஸல் என்பவர். 1886-ல் வெளியிடப்பட்ட, சகாப்தங்களின் தெய்வீக திட்டம் (ஆங்கிலம்) என்ற அவருடைய புத்தகத்தை லட்சக்கணக்கானோர் வாசித்தனர். அதில் ஆற்றல்வாய்ந்த ஓர் அதிகாரம் “உன்னதமான புத்திக்கூர்மையுள்ள படைப்பாளர் இருப்பது நிரூபிக்கப்பட்டாயிற்று,” என்பதாகும்.
தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், கடவுளிலும் பைபிளிலும் நம்பிக்கை வைப்பதற்குப் பலமான காரணங்களை அளித்து, கட்டுரைகளையும் துண்டுப்பிரதிகளையும் புத்தகங்களையும் ரஸல் எழுதினார். இவை உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியினால் பிரசுரிக்கப்பட்டன. அதனுடைய இரண்டாவது தலைவர் J. F. ரதர்ஃபோர்ட், நம்பிக்கையை மேலுமாக ஆதரித்த படைப்பு (ஆங்கிலம்) (1927) புத்தகத்தையும் மற்ற புத்தகங்களையும் எழுதினார்.
அந்தச் சங்கம் அண்மையில் இந்த விஷயங்களின் பேரில் கூடுதலான புத்தம் புதிய தகவலைத் தயாரித்துள்ளது. நீங்கள் கவனமாகச் சிந்திப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் இவற்றை உங்களுக்கு அளிக்கமுடியும்.
கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ள அல்லது ஓர் இலவச வீட்டுப் பைபிள் படிப்பை உங்களுக்கு நடத்தும்படி எவராவது ஒருவர் உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.