“விருட்சத்தின் நாட்களைப்போல”
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் மோசே எழுதினார். “எங்கள் ஆயுசு நாட்கள் எழுவது வருஷம் பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும் அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே.” சங்கீதம் 90’10.
மருத்துவத்துறையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், மனிதனின் வாழ்நாட்காலம் மோசேயின் நாளில் இருந்தே அளவே இன்னும் இருக்கிறது. ஆயினும் மானிடர்கள் எப்போதுமே இத்தகைய விரைவில் மறைந்து போகும் வாழ்வுக்குத் தீர்த்தொதுக்கப்பட்டுவிட மாட்டார்கள். பைபிள் புத்தகமாகிய ஏசாயாவில் கடவுள் சொன்னார்: “விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும், நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:22
பைபிள் தேசங்களில் மிக நீண்ட காலம் வாழும் மரங்களில் ஒன்று ஒலிவமரமாகும். இங்குள்ள படத்தில் காணப்படும் மரம் கலிலேயாவில் இன்னும் செழிப்பாய் காணப்படுகிற ஆயிரவருட வயதான அநேக ஒலிவ மரங்களில் ஒன்றாகும், மனிதர்கள் எப்பொழுது இவ்வளவு நீண்டகாலம் வாழ தொடங்குவர்? கடவுள் “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” உருவாக்குகையில் அது நடந்தேறும் என்று அதே தீர்க்கதரிசனம் விளக்குகிறது.—ஏசாயா 65:17
வெளிப்படுத்துதல் புத்தகமும்கூட ‘புதிய வானமும் புதிய பூமியும்’—ஒரு புதிய பரலோக அரசும், ஒரு புதிய மானிட சமுதாயமும்—ஸ்தாபிக்கப்படுவதைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைக்கிறது. அப்போது “அவர்களுடைய கண்ணீர்யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமும்மில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:1, 4.
இந்தத் தெய்வீக வாக்கு சீக்கிரத்தில் நிறைவேறும். அப்போது ஒலிவமரத்தின் நாட்களும்கூட வெறும் 24-மணி நேர நாளைப் போல தோன்றும். நம் கைகளின் வேலைகளை முழுமையாக அனுபவிக்க நமக்கு மிகுதியான நேரம் இருக்கும்.