வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
14-ம் நூற்றாண்டு யூத மருத்துவராகிய ஷெம்-டோப் பென் ஐசக் இப்ன் ஷாப்ரூட் என்பவரால் நகலெடுக்கப்பட்ட மத்தேயுவின் எபிரெய மூலவாக்கியத்தில் டெட்ராகிராமட்டன் (கடவுளுடைய பெயரின் நான்கு எபிரெய எழுத்துக்கள்) காணப்படுகிறதா?
இல்லை, நிச்சயமாகவே இல்லை. என்றபோதிலும், காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1996, பக்கம் 13-ல் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளபடி, மத்தேயுவின் இந்த மூலவாக்கியம் ஹாஷ்ஷெம் (hash·Shem’) (முழு வடிவிலோ சுருக்கமாகவோ எழுதப்பட்டது) என்பதை 19 தடவை பயன்படுத்துகிறது.
எபிரெய வார்த்தையாகிய ஹாஷ்ஷெம், “அந்தப் பெயர்” என அர்த்தப்படுத்துகிறது; அது நிச்சயமாகவே கடவுளுடைய பெயரைக் குறிக்கிறது. உதாரணமாக, ஷெம்-டோபின் மூலவாக்கியத்தில், ஹாஷ்ஷெம் என்பதன் சுருக்க வடிவம் மத்தேயு 3:3-ல், அதாவது ஏசாயா 40:3-ஐ மத்தேயு மேற்கோள் காண்பித்த ஒரு பகுதியில் காணப்படுகிறது. மத்தேயு இந்த டெட்ராகிராமட்டன் காணப்படும் எபிரெய வேதாகமத்திலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காண்பித்தபோது, அவர் தன்னுடைய சுவிசேஷத்தில் கடவுளுடைய பெயரை சேர்த்துக்கொண்டார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது. ஆகையால், ஷெம்-டோப் அளித்த எபிரெய மூலவாக்கியத்தில் டெட்ராகிராமட்டன் பயன்படுத்தப்படாதபோதிலும், மத்தேயு 3:3-ல் இருப்பதுபோல “அந்தப் பெயர்” என்று பயன்படுத்தியிருப்பது, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “யெகோவா” என்ற பெயரை பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.
மத்தேயுவின் எபிரெய மூலவாக்கியத்தை ஷெம்-டோப் தன்னுடைய மத விவாதங்கள் அடங்கிய ஈவன் போக்கன் என்ற நூலில் நகலெடுத்தார். என்றாலும், அந்த எபிரெய மூலவாக்கியத்திற்கான ஊற்றுமூலம் எது? இந்த விஷயத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் ஜார்ஜ் ஹோவர்டு, “ஷெம்-டோபின் எபிரெய மத்தேயு, ஏறக்குறைய கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் நான்கு நூற்றாண்டுக்குட்பட்ட காலத்திற்குரியது” என கூறுகிறார்.a இதன்பேரில் மற்றவர்கள் ஒத்துப்போகாமல் இருக்கலாம்.
ஹோவர்டு குறிப்பிடுகிறார்: “இந்த மூலவாக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ள எபிரெய மத்தேயு, கிரேக்கில் எழுதப்பட்ட மத்தேயுவிலிருந்து பல்வேறு வித்தியாசங்களால் முக்கியமாய் தனிப்படுத்திக் காண்பிக்கப்படுகிறது.” உதாரணமாக, ஷெம்-டோப் மூலவாக்கியத்தின்படி, யோவானைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை.” இயேசுவினுடைய அடுத்த வார்த்தைகளை அது விட்டுவிடுகிறது: “ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.” (மத்தேயு 11:11) ஓரளவு இதுபோன்ற முறையில், எபிரெய வேதாகமத்தின் பூர்வ எபிரெய மூலவாக்கியத்திற்கும் கிரேக்க செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பிலுள்ள அதற்கு இணையான மூலவாக்கிய வார்த்தை அமைப்புக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் வேறுபாடுகளை நாம் ஏற்றுக்கொள்கிறபோதிலும், இத்தகைய பூர்வீக மூலவாக்கியங்கள் ஒத்துவாக்கிய ஆராய்ச்சிக்கு சிறிது உதவுகின்றன.
மேற்குறிப்பிட்டபடி, மத்தேயு உண்மையிலேயே டெட்ராகிராமட்டனை பயன்படுத்தினார் என்பதை நம்புவதற்கு நல்ல காரணம் உள்ள இடங்களில், “அந்தப் பெயர்” என்பதை மத்தேயு சுவிசேஷத்தின் ஷெம்-டோப் மூலவாக்கியம் சேர்த்திருக்கிறது. இவ்வாறாக, 1950 முதற்கொண்டு, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதற்கு ஷெம்-டோபின் மூலவாக்கியம் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது; மேலும், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (ஆங்கிலம்) என்பதில் அது இன்னும் இடக்குறிப்பு செய்யப்படுகிறது.b
[அடிக்குறிப்புகள்]
a 1984-ல், உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.