மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் படிகள்
1.ஆவிக்குரியத்தன்மையை உயர்வாக கருதி, அதை வளருங்கள். இயேசு சொன்னார்: “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, அதை கைக்கொள்கிறவர்களே மகிழ்ச்சியுள்ளவர்கள்!”—லூக்கா 11:28, NW.
2. செல்வத்தையோ சொகுசையோவிட கடவுளுடைய அங்கீகாரமே அதிமுக்கியம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். பவுல் எழுதினார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். . . . உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—1 தீமோத்தேயு 6:6-8.
3.பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை வளர்த்துக்கொள்ளவும் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவும் முயற்சி செய்யுங்கள்.—ரோமர் 2:14, 15.
4.யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க திடத்தீர்மானமாய் இருந்து, அதன் மூலம் அவருடைய மக்களில் ஒருவராக இருப்பதற்குத் தகுதிபெறுங்கள். பூர்வத்தில் வாழ்ந்த தாவீது சொன்னார்: “யெகோவாவை கடவுளாக கொண்டுள்ள ஜனம் மகிழ்ச்சியுள்ளது!”—சங்கீதம் 144:15, NW.