இளம் வாசகருக்கு
உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிக்க...
செய்ய வேண்டியவை: ஓர் அமைதியான சூழலில் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். வசனங்களை வாசிக்கையில் நீங்களும் அங்கே இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். காட்சிகளை மனக்கண்ணில் ஓடவிடுங்கள். அங்கு ஒலிக்கும் சத்தங்களைக் கேளுங்கள். கதாபாத்திரங்களின் உணர்வுகளில் லயித்துவிடுங்கள். பைபிள் பதிவில் வரும் சம்பவங்களை நிஜ சம்பவங்களாய்க் கற்பனை செய்து பாருங்கள்.
முக்கியக் கதாபாத்திரங்கள்: யோனத்தான், தாவீது, சவுல்
கதைச் சுருக்கம்: தாவீது கோலியாத்தைக் கொன்ற பிறகு, யோனத்தான் தாவீதின் உயிர்த்தோழர் ஆகிறார்.
1 நடந்ததை யோசித்துப் பாருங்கள்.—1 சாமுவேல் 17:57–18:11; 19:1; 20:1-17, 41, 42-ஐ வாசியுங்கள்.
உங்கள் கற்பனையிலிருந்து சவுலின் தோற்றத்தை விவரியுங்கள். (உதவிக் குறிப்பு: 1 சாமுவேல் 10:20-23-ஐக் காண்க.)
_______
யோனத்தானைச் சந்தித்தபோது, தாவீது ஒரு வாலிபராக இருந்தார். அப்போது தாவீது எப்படி இருந்திருப்பார்? (உதவிக் குறிப்பு: 1 சாமுவேல் 16:12, 13-ஐக் காண்க.)
_______
1 சாமுவேல் 20-ன் முடிவுப் பகுதியில் நாம் வாசிக்கிறபடி, தாவீதும் யோனத்தானும் பிரிந்து சென்றபோது அவர்களுடைய குரலில் என்ன உணர்ச்சிகள் வெளிப்பட்டிருக்கும்?
_______
2 ஆழ்ந்து ஆராயுங்கள்.
“யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது” என்று வசனம் சொல்கிறது. இதை, ஈஸி டு ரீட் வர்ஷன், “யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களானார்கள்” என்று சொல்கிறது. (1 சாமுவேல் 18:1) தாவீதிடம் இருந்த என்ன குணங்கள் யோனத்தானைக் கவர்ந்திருக்கலாம்? (உதவிக் குறிப்பு: 1 சாமுவேல் 17:45, 46-ஐக் காண்க.)
_______
தாவீதிற்கும் யோனத்தானிற்கும் இடையே கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் இருந்தது. இருந்தாலும், இவர்கள் இருவரும் ‘நெருங்கிய நண்பர்களாக’ இருந்ததற்கு என்ன காரணங்கள் இருந்திருக்கலாம்?
_______
நெஞ்சைத் தொடும் இந்தப் பதிவிலிருந்து, ஓர் உண்மையான நண்பருக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டுமெனத் தெரிந்துகொள்கிறோம்? (உதவிக் குறிப்பு: நீதிமொழிகள் 17:17; 18:24-ஐக் காண்க.)
_______
தன் அப்பாவிடம் உண்மையாய் நடந்துகொள்வதைவிட தாவீதிடம் உண்மையாய் நடந்துகொள்வதற்கே யோனத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார், அது ஏன்?
_______
3 கற்றுக்கொண்டதைக் கடைப்பிடியுங்கள். பின்வருபவை குறித்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை எழுதுங்கள்:
நட்பு.
_______
உண்மைத்தன்மை.
_______
வயதில் மூத்தவருடன் கொள்ளும் நட்பு.
_______
நல்ல குணமுடையவர்களை உங்களுடைய நண்பர்களாய் ஆக்கிக்கொள்வது எப்படி?
_______
4 இந்தப் பதிவில் எது உங்கள் மனதைத் தொட்டது, ஏன்?
_______
(w10-E 07/01)
உங்களிடம் பைபிள் இல்லையென்றால்... யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள், அல்லது www.watchtower.org என்ற இணைய முகவரியில் காணப்படுகிற மொழிகளில் வாசியுங்கள்