நம்முடைய வெப் சைட் துண்டுப்பிரதியைப் பயன்படுத்துங்கள்
வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? என்பதுதான் இந்தத் துண்டுப்பிரதியின் தலைப்பு. மூன்று முக்கியமான கேள்விகள் இந்தத் துண்டுப்பிரதியின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சந்தர்ப்பம் கிடைத்தால், மூன்று கேள்விகளில் எந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்று நீங்கள் சந்திக்கும் நபரிடம் சாதுரியமாகக் கேளுங்கள். அவருக்கு ஆர்வம் இருப்பது தெரிந்தால் நம் வெப் சைட்டில், வெளியீடுகள் > புத்தகங்கள், சிறுபுத்தகங்கள் என்ற பகுதியைக் காட்டுங்கள். கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? கடவுளுடைய அரசாங்கம் எதையெல்லாம் சாதிக்கும் என்ற கேள்விகளுக்கு, வெளியீடுகள் > புத்தகங்கள், சிறுபுத்தகங்கள் என்ற பகுதியில் நற்செய்தி சிற்றேட்டைக் காட்டுங்கள்.
இந்தத் துண்டுப்பிரதியை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். கடவுளுடைய அரசாங்கத்தில் நாம் அனுபவிக்கப்போகும் அருமையான வாழ்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள்.