ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வேறு மொழி பேசுகிறவர்களுக்கு சாட்சி கொடுங்கள்
ஏன் முக்கியம்: ‘எந்தத் தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்’ எல்லாரும் யெகோவாவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (அப். 10:34, 35) அதனால்தான், “உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சி” கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னார். (மத். 24:14) சகரியா, “பலவித பாஷை” பேசும் ஆட்கள் நற்செய்தியை ஆர்வமாக கேட்பார்கள் என்று தீர்க்கதரிசனம் சொன்னார். (சக. 8:23) “எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும்” பேசுகிறவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்து வருவதை யோவான் தரிசனத்தில் பார்த்தார். (வெளி. 7:9, 13, 14) அப்படியென்றால், நாம் ஊழியம் செய்யும்போது வேறு மொழி பேசுகிற ஒருவரை பார்த்தால் அவருக்கு சாட்சி கொடுப்பது எவ்வளவு முக்கியம்!
இந்த மாதம் செய்து பாருங்கள்:
வேறு மொழி பேசும் ஒருவருக்கு சாட்சி கொடுப்பது போல் அடுத்த குடும்ப வழிபாட்டிலேயே நடித்து பாருங்கள்.