பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 25
“விழிப்புடன் இருங்கள்”
பத்து கன்னிப்பெண்களைப் பற்றிய உவமையை பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு இயேசு சொல்லியிருந்தாலும், அதிலிருக்கிற குறிப்பு எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது. (w15 3/15 பக். 12-16) “அதனால், விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” என்று இயேசு சொன்னார். (மத் 25:13) இயேசுவின் உவமையை உங்களால் விளக்க முடியுமா?
மணமகன் (வசனம் 1)—இயேசு
புத்தியுள்ள, தயாராக இருந்த கன்னிப்பெண்கள் (வசனம் 2)—தங்கள் நியமிப்பை உண்மையோடு செய்யத் தயாராக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள். அவர்கள் முடிவுவரை ஒளிவீசிக்கொண்டு இருப்பார்கள் (பிலி 2:15)
“இதோ, மணமகன் வருகிறார்!” என்ற சத்தம் (வசனம் 6)—இயேசுவின் பிரசன்னத்திற்கான அத்தாட்சி
புத்தியில்லாத கன்னிப்பெண்கள் (வசனம் 8)—மணமகனை வரவேற்கப்போன, ஆனால் விழிப்போடும் உத்தமத்தன்மையோடும் இல்லாத பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்
எண்ணெயைத் தர மறுத்த புத்தியுள்ள கன்னிப்பெண்கள் (வசனம் 9)—கடைசி முத்திரையைப் பெற்றுக்கொண்ட உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களால், உண்மையில்லாமல் போன பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு உதவ முடியாது; ஏனென்றால், அப்போது காலம் கடந்திருக்கும்
“மணமகன் வந்துவிட்டார்” (வசனம் 10)—இயேசு, மிகுந்த உபத்திரவத்தின் முடிவில் நியாயந்தீர்க்க வருகிறார்
புத்தியுள்ள கன்னிப்பெண்கள் மணமகனோடு திருமண விருந்தில் கலந்துகொள்ள வீட்டுக்குள் போவதும், கதவு மூடப்படுவதும் (வசனம் 10)—இயேசு, உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ளவர்களை பரலோகத்துக்குக் கூட்டிச் சேர்க்கிறார்; உண்மையில்லாமல் போனவர்களோ, தங்களுடைய பரலோக வெகுமதியை இழக்கிறார்கள்