உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இந்த வருஷத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளைப் படித்தீர்களா? கீழே இருக்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?
யெகோவாவிடம் பேசுவதற்கும் அவர் பேசுவதைக் கேட்பதற்கும் அவரைப் பற்றி யோசிப்பதற்கும் நேரம் செலவு செய்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
நாம் சரியான முடிவுகளை எடுப்போம், நம்மால் திறமையாகக் கற்றுக்கொடுக்க முடியும், நம் விசுவாசம் பலமாகும், யெகோவாமேல் நமக்கு இருக்கும் அன்பு அதிகமாகும்.—w22.01, பக். 30-31.
யெகோவாவையும் அவர் நியமித்திருக்கிற ஆட்களையும் நம்புவதால் நமக்கு என்ன நன்மை?
யெகோவா எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்வார் என்று நாம் நம்புகிறோம் என்பதை இப்போதே காட்ட வேண்டும். அதற்கு, மூப்பர்கள் தரும் வழிநடத்துதலையும் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் சந்தேகப்படாமல் இருக்க வேண்டும். அப்போதுதான், மிகுந்த உபத்திரவத்தின்போது நமக்குக் கிடைக்கிற ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி தோன்றினாலும் நாம் உடனடியாகக் கீழ்ப்படிவோம்.—w22.02, பக். 4-6.
ஆளுநர் “செருபாபேலின் கையில் இருக்கும் தூக்குநூலை” பற்றி சகரியாவிடம் தேவதூதர் சொன்னதன் அர்த்தம் என்ன? (சக. 4:8-10)
இந்தத் தரிசனம் கடவுளுடைய மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. அதாவது, அந்த ஆலயம் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், அது முழுமையாகக் கட்டி முடிக்கப்படும்... அது யெகோவா எதிர்பார்க்கிற விதமாக இருக்கும்... என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.—w22.03, பக். 16-17.
நாம் எப்படி ‘பேச்சில் . . . முன்மாதிரியாக’ இருக்கலாம்? (1 தீ. 4:12)
நாம் ஊழியத்தில் அன்பாகவும் மரியாதையாகவும் பேசலாம், கூட்டங்களில் மனதிலிருந்து பாடலாம், பதில் சொல்வதைப் பழக்கமாக்கிக்கொள்ளலாம், பழிப்பேச்சைத் தவிர்த்து உண்மையைப் பேசலாம், மற்றவர்களைப் பலப்படுத்தும் விதமாகவும் பேசலாம்.—w22.04, பக். 6-9.
வெளிப்படுத்துதல் 13:1, 2-ல் சொல்லப்பட்டிருக்கும் மூர்க்க மிருகத்துக்கு, தானியேல் 7-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் நான்கு மிருகங்களின் (ராஜ்யங்களின்) அம்சங்களும் ஒன்றுசேர்ந்து இருப்பது ஏன்?
வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் மூர்க்க மிருகம், ரோம் போன்ற ஒரேவொரு வல்லரசை மட்டும் குறிக்காது. இதுவரைக்கும் மனிதர்களை ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களையும் அது குறிக்கிறது.—w22.05, பக். 9.
யெகோவா நீதி செய்வார் என்று நாம் நம்புவதைக் காட்டுவதற்கு முக்கியமான வழி என்ன?
யாராவது நம் மனதைக் காயப்படுத்தியிருந்தால் அல்லது நமக்கு எதிராக ஏதாவது பாவம் செய்திருந்தால், கோபத்தையும் வெறுப்பையும் நம் மனதிலிருந்து தூக்கிப்போட்டுவிட்டு, விஷயங்களை யெகோவாவின் கையில் விட்டுவிட நாம் முயற்சி செய்ய வேண்டும். பாவத்தால் வந்த எல்லா விளைவுகளையும் அவர் சரிசெய்வார்.—w22.06, பக். 10-11.
ஒரு கூட்டத்தில் ஜெபம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போது சகோதரர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?
சபைக்கு ஆலோசனை கொடுக்கும் விதமாகவோ, அறிவிப்பு செய்யும் விதமாகவோ அந்த ஜெபம் இருக்கக் கூடாது. முக்கியமாக கூட்டம் ஆரம்பிக்கும்போது “நிறைய வார்த்தைகளைச்” சொல்லி ஜெபம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. (மத். 6:7)—w22.07, பக். 24-25.
“கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்பதன் அர்த்தம் என்ன? (யோவா. 5:29)
அவர்கள் முன்பு வாழ்ந்த வாழ்க்கைக்காகத் தண்டனைத் தீர்ப்பைப் பெற மாட்டார்கள். ஆனால், உயிர்த்தெழுந்து வந்த பிறகு எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டுகிறார்கள்... எப்படி நடந்துகொள்கிறார்கள்... என்பதெல்லாம் கண்காணிக்கப்படும்.—w22.09, பக். 18.
செப்டம்பர் 1922-ல் நடந்த மாநாட்டில் சகோதரர் ஜே. எஃப். ரதர்ஃபோர்ட் என்ன பரபரப்பான அறிவிப்பைச் செய்தார்?
அமெரிக்காவில், ஒஹாயோவில் இருக்கிற சீடர் பாயிண்ட்டில் நடந்த மாநாட்டில் அவர் இப்படி அறிவிப்பு செய்தார்: “ராஜா ஆட்சி செய்றாரு! நீங்கதான் அவரோட பிரதிநிதிகள். அதனால, ராஜாவையும் அவரோட ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்க, விளம்பரப்படுத்துங்க, விளம்பரப்படுத்துங்க!”—w22.10, பக். 3-5.
பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ள கடவுள் நமக்கு உதவி செய்கிற என்ன மூன்று வழிகளைப் பற்றி ஏசாயா 30-வது அதிகாரம் சொல்கிறது?
(1) அவர் நம்முடைய ஜெபங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறார், அதற்குப் பதில் கொடுக்கிறார். (2) நமக்கு வழிநடத்துதல் கொடுக்கிறார். (3) இப்போது நம்மை ஆசீர்வதிக்கிறார், எதிர்காலத்திலும் ஆசீர்வதிக்கப்போகிறார்.—w22.11, பக். 9.
சங்கீதம் 37:10, 11, 29-ல் இருக்கும் வார்த்தைகள் அன்றும் நிறைவேறின, எதிர்காலத்திலும் நிறைவேறும் என்ற முடிவுக்கு நாம் ஏன் வரலாம்?
தாவீதின் வார்த்தைகள், இஸ்ரவேலில் இருந்த நிலைமையை, உதாரணத்துக்கு சாலொமோனின் ஆட்சியில் இருந்த நிலைமையை, விவரிக்கின்றன. வரப்போகும் பூஞ்சோலையைப் பற்றி இயேசு பேசியபோது, 11-வது வசனத்தை மேற்கோள் காட்டினார். (மத். 5:5; லூக். 23:43)—w22.12, பக். 8-10, 14.