நான் நேரில் பார்க்க விரும்பினேன்
‘என் பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் எங்கே இருக்கின்றன?’ என்று நான் அடிக்கடி என்னையே கேட்டிருக்கிறேன். அவை எவ்வளவு பழமையானது என்று எப்படித் தீர்மானிக்கப்படக்கூடும்? காலங்களினூடே அவை எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன? மேலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவை மூல பைபிள் எழுத்துக்களைக் குறிக்கின்றன என்று நாம் நிச்சயமாயிருக்கக்கூடுமா? பைபிளிலிருந்து என் சொந்த விசுவாசம் இப்போது பலப்படுத்தப்பட்டதாயிருக்கிறது, ஆனால் பைபிள் திறமையான விதத்தில் ஏமாற்றும் ஒன்று என்று நம்பும்படியாக வளர்க்கப்பட்டிருக்கையில் இவை போன்ற கேள்விகள் எப்போதுமே என் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன. எனக்கிருந்த ஆர்வமானது, ஐரோப்பாவிலுள்ள மிகப்பிரபலமான நூல்நிலையங்களைப் பார்வையிடும்படி, நான் அங்கு பிரயாணம் செய்கையில் வழிநடத்தியது. என் முதலாவது சந்திப்பு, நூற்றுக்கணக்கான பைபிளின் கையெழுத்துப் பிரதிகள் காணப்படும் இத்தாலியிலுள்ள ரோம் நகரமாக இருந்தது.
கோபுரங்களைக் கொண்ட சுவர்களுக்கும் இறுக்கமான பாதுகாப்புடன் கூடிய அரண்மனை போன்ற வத்திக்கன் நகருக்குப் பின்புறம் ஒருவர், மெய்யான பொக்கிஷ சாலையிலேயே நுழைந்து கொண்டிருக்கும் எண்ணத்தைப் பெறுகிறார். வத்திக்கன் நூல்நிலையம், போப்பின் அரண்மனை முற்றத்தில் இருப்பதால், அதைப் பார்க்கச் செல்பவர் விசேஷ அனுமதி பெறவேண்டும்.
இங்கே, புகழ்பெற்ற கைப்பிரதி எண்: 1209-ஐக் கொண்ட அல்லது கோடெக்ஸ் வத்திக்கனஸ் என்றழைக்கப்படும் வத்திக்கன் கையெழுத்துப்பிரதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அது பொதுவாக “B” என்ற அடையாளத்தால் குறிப்பிடப்படுகிறது. அப்போஸ்தலர்களின் நாட்களுக்குப் பிறகு 300 வருடங்களுக்குக் குறைவாக, பொ.ச. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும், எபிரெய வேதாகமத்தையும் கொண்டிருக்கிறது. அது 1481-லிருந்து வத்திக்கன் நூல்நிலையத்தின் இருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் கல்வி சம்பந்தப்பட்ட உலகிற்கு 1889-90 ஆண்டு வரையில் கொடுக்கப்படவில்லை.
அந்த எழுத்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் தெளிவாகவும் மங்காததாகவும் இருந்ததாக நான் முதலில் எண்ணினேன். ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட மை, பார்க்கும்போது, மங்கியிருந்தது, ஆனால் அதன் ஒவ்வொரு எழுத்தின் மேலும் பின்னால் எழுதப்பட்ட எழுத்துக்கள், கோடெக்ஸின் பெரும்பகுதியை அழித்து, அதன் ஆரம்ப அழகை இழக்கும்படி செய்தன. வத்திக்கனஸ் என்பது, நடைமுறையில், கிரேக்கிலுள்ள மற்ற எல்லாப் பரிசுத்த வேதாகமக் கையெழுத்தைப் போன்றே, கோடெக்ஸ் ஆகும். அது, ஒரு சுருளுக்குப் பதிலாக, தாள்களைக் கொண்ட ஒரு புத்தகமாகும். அது வரைநயத்தோல் மேல் (தோலின் மெல்லிய வகை) இளம் மிருகங்களின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் ஓர் எழுதும் பொருளின்மேல் எழுதப்பட்டிருக்கிறது.
‘அத்தகைய பிரதிகளின் காலம் எவ்விதம் கண்டுபிடிக்கப்படக்கூடும்?’ நான் தெரிந்துகொள்ள விரும்பினேன். கையெழுத்தின் நடை ஒரு முக்கியக் காரணியாய் இருப்பதை நான் கற்றேன். கையெழுத்துப் பிரதியில் இருவேறுபட்ட கையெழுத்து மாதிரிகளை அந்நூலகத்தின் காரியதரிசி பரிவுடன் எனக்குக் காண்பித்தார். ஆதியாகமம் முதல் எபிரெயர் புத்தகம் வரை, அன்ஸால் என்றழைக்கப்படும் கையெழுத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இது, கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் புத்தகங்கள் எழுதப்பட்ட பெரிய எழுத்துக்கள் நடையாக இருந்தது. வார்த்தைகளுக்கிடையில் இடைவெளி இல்லை, நிறுத்தற்குறியும் இல்லை. மறுபட்சத்தில், வெளிப்படுத்துதல் (மூல கையெழுத்துப் பிரதியின் பாகமல்லாத) மினுஸ்கூல் கையெழுத்தாகிய, தடையற்ற வகையில் எழுத்துக்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்ட விதத்தில் அமைந்த கூட்டெழுத்து முறையில் எழுதப்பட்டிருக்கின்றன. இச்சிறிய எழுத்துநடை, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரபலமானது.
பண்டைய எழுத்துக்களைப் பற்றி ஆய்வு செய்யும் அறிவியலுக்கு போலியோகிராஃபி என்று பெயர். என்றபோதிலும், ஓர் ஆளின் எழுத்துநடை பொதுவாக, அவருடைய வாழ்நாளுக்குள் அதிகமான மாறுதலைக் கொண்டிராதபடியால், ஒரு கையெழுத்துப்பிரதி, கையெழுத்து நடையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஊர்ஜிதம் செய்யப்படுவது ஒரு 50-வருட காலப்பகுதிக்கு மேல் செய்யப்பட முடியாது.
ஒரு மடாலயத்தில் “குப்பை”
எனது அடுத்த சுற்றுப் பிரயாணத் திட்டம் இங்கிலாந்தாக இருந்தது. பைபிள் கையெழுத்துப் பிரதிகளின் அதிகளவு தொகுப்புகளில் ஒன்று இங்கே காணப்படுகிறது. லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சி நிலையத்தின் கெம்பீரமான நுழைவாயிலின் முன்னாலுள்ள மாடிப்படிகளில் ஏறுவது, நிச்சயமாகவே என் ஆவலை அதிகப்படுத்தியது. இது புகழ்பெற்ற கோடெக்ஸ் சினாய்டிகஸ்-ன் இருப்பிடமாகும். (இக்கையெழுத்துப் பிரதியின் சில தாள்கள், 1844-ல் சினாய்யிலுள்ள மடாலயத்தில் ஒரு குப்பைக் கூடையில் கண்டுபிடிக்கப்பட்ட விதத்தைப் பற்றிய குறிப்பிடத்தகுந்த வரலாறு ஆங்கில விழித்தெழு!-வின் 1979, அக்டோபர் 8, தேதியிட்ட வெளியீட்டில் கூறப்பட்டது.) வத்திக்கனஸூடன் இக்கையெழுத்துப் பிரதியும் வேதவாக்கியங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு [New World Translation of the Holy Scriptures] மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வாக்கியங்களுக்கு முக்கிய அடிப்படையாக இருந்தது. கோடெக்ஸ் அலெக்ஸாந்திரினஸின் பக்கத்தில் அதைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன்.
சினாய்டிகஸ் இப்பத்திரிகையைப் போன்று இருமடங்குக்கும் மேல் உள்ள ஒரு பக்க அளவைக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்திற்கு நான்கு பத்திகள், மெல்லிய வரைநயத்தோல் மேல் கொண்டிருக்கிறது. சினாய்டிகஸின் சர்வதேச அடையாளமானது, எபிரெய அகர வரிசையின் முதல் எழுத்தாகிய ‘ஆலெப்,’ “א” என்பதாகும். அது மேலுமாக கி.பி. நான்காம் நூற்றாண்டு காலப் பகுதியைச் சேர்ந்தது. ஆனால் வத்திக்கனஸை விட சற்று பிற்பட்ட காலத்தினதாகக் கருதப்படுகிறது.
சினாய்டிகஸ் போன்ற கையெழுத்துப் பிரதிகளின் கண்டுபிடிப்பு முக்கியமாகும், ஏனெனில் அவை கண்டுபிடிக்கப்படுமுன், போலியான பகுதிகளைக் கொண்டவையாயும், பிரதிகள் எடுக்கப்பட்டதால், அதிகப் பிழைகளைக் கொண்டிருந்த மிகப் பிந்திய பிரதிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட வேண்டியிருந்தன. உதாரணமாக, யோவான் 7:53-8:11-லுள்ள வேசிப்பெண்ணைப் பற்றியது ஒரு பிற்பட்ட சேர்க்கையாக இருப்பதாக சினாய்டிகஸூம், வத்திக்கனஸூம் குறிப்பிட்டுக் காட்டின. ஏனெனில் அத்தகவலை அவ்விரு கையெழுத்துப் பிரதிகளும் கொண்டில்லை.
ஒரு நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டது
அநேக கண்காட்சி முறையில் பங்குபெறுவது கி.பி. 400-450 காலத்தைச் சேர்ந்த கோடெக்ஸ் அலெக்ஸாந்திரினஸ் (A) ஆகும். அது, நான் பார்த்த கையெழுத்துப் பிரதிகளிலேயே மிக அழகாக எழுதப்பட்ட ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. அது அதன் பெயரை, எகிப்திலுள்ள அலெக்ஸாந்திரியாவிலிருக்கும் தலைமை நூலகத்திலிருந்து கொண்டிருக்கிறது. அங்குதான், அது 1611-ம் ஆண்டைச் சேர்ந்த பைபிளின் புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அங்கீகாரமளித்த இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ்-க்குக் கொடுக்கப்படுவதற்கு முன் வைக்கப்பட்டிருந்தது. என்றபோதிலும், கோடெக்ஸ் அலெக்ஸாந்திரினஸ் 1627 வரை, அது முடிவுற்றதன் வெகு காலத்திற்குப் பிறகும் கிடைக்கவில்லை.
அது அரசு நூலகத்தில் எப்போதுமே கவனஞ் செலுத்தப்பட்டதாய் இல்லை. 1731-ல் அது அழிவின் மிக நெருங்கிய கட்டத்தைத் தப்பியது. கோடெக்ஸ் வைக்கப்பட்டிருந்த அறையின் கீழே தீப்பிடித்துவிட்டது. என்றபோதிலும், சிலர் அக்கையெழுத்துப்பிரதியின் மதிப்பை போற்றியது ஆதாரப்பூர்வமாகும். ஏனெனில் ஒரு “கண்ணால் கண்ட சாட்சி, கற்றறிந்த டாக்டர் பென்ட்லி ‘இரவு நேரத்தில் உடுத்தும் அங்கியோடும் தலைப்பாகையோடும்’ தன் கைகளின் கீழ் கோடெக்ஸ் அலெக்ஸாந்திரினஸூடன் கெம்பீரமாக அக்கட்டடத்தை விட்டு வெளியே நடந்து வந்ததாகக்” கூறுகிறார்.
19-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதிகாலத்தில் மூன்று பெரிய கோடெக்ஸ்களாகிய வத்திக்கனஸ், சினாய்டிகஸ் மற்றும் அலெக்ஸாந்திரினஸ் என்பவைகள் ஒன்றின் சரியான மற்றொரு பிரதியாக, போட்டோ நகல்களின் வடிவில் தனித்தனியே வெளியிடப்பட்டன. புத்தகத் தயாரிப்பில் மூலப் பொருளாகப் பயன்படுத்தப்பட ஆரம்பித்த வரைநயத்தோல் பயன்படுத்தப்பட்ட அதே சமயத்தில் தானே அந்த முந்திய இரண்டும் எழுதப்பட்டிருந்தன. முந்திய நூற்றாண்டுகளில் எழுத்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட பாப்பிரஸின் அழியும் தன்மையின் பார்வையில் பழையவை எவையும் காணப்படாததாய்த் தோன்றியது. ஆனால், அதன் பிறகு 1931-ல் பாப்பிரஸில் எழுதப்பட்ட வெகு பழைய 11 கையெழுத்துப் பிரதிகள் திடீர் தோற்றத்திற்கு வந்தது.
அயர்லாந்தில் பொக்கிஷங்கள்
டப்ளினின் குடியிருப்புப் பகுதியில், குளிர்ந்த ஈரமான அயர்லாந்தின் சீதோஷ்ண நிலையின்போது மட்டுமே பசுமையான அழகிய தோட்டங்களின் மத்தியில், அமெரிக்காவின் ஆட்சித் தலைவர் செஸ்டர் பீட்டியின் நூல்நிலையமும் பொருட்காட்சி நிலையமும் இருக்கிறது. சரித்திரப்பூர்வ கையெழுத்துப் பிரதிகளில் அக்கறை கொண்டவராய் அவர், சினாய்டிகஸ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து முக்கியமான வேதாகமக் கண்டுபிடிப்புகளைப் பெற்றார். எகிப்திலுள்ள நான்காம்-நூற்றாண்டு கிறிஸ்தவ சமுதாயத்தின் புத்தகங்களின் தொகுப்பாக பார்வைக்கு இருந்தது. அவை “நைல் நதிக்கு அருகிலுள்ள பூர்வ சர்ச் இருக்கும் ஸ்தலத்தில்” கண்டுபிடிக்கப்பட்டன.
பாப்பிரஸ் வரைநயத்தோலைவிட மிகவும் வித்தியாசமானது. அது நைல் நதியின் கழிமுகப் பகுதியில் நீரில் வளரும் பாப்பிரஸ் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை, வரைநயத்தோலைவிட அது அதிகப் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
நீங்கள் டப்ளினிற்குச் சென்று பார்வையிட்டால், பாப்பிரஸ் கையெழுத்துப் பிரதிகளின் பெரிய தொகுப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க இயலும். அவற்றுள் ஒன்று, P45 என்று குறிப்பிடப்படுவது, மோசமாக பழுதடைந்தபோதிலும் நான்கு சுவிசேஷங்களின் பகுதிகளையும் அப்போஸ்தல நடபடிகளையும் கொண்டிருக்கிறது. அது கி.பி மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து வந்ததாகத் தேதியிடப்பட்டிருக்கிறது.
மேலும் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, திருவெளிப்பாடு அல்லது வெளிப்படுத்துதலின் கோடெக்ஸின் பத்து தாள்களைக் கொண்ட P47 இருக்கிறது. மேலும் அக்கறைக்குரிய ஒன்று, சுமார் கி.பி. 200-லுள்ள P46 ஆகும். இது பவுலின் கடிதங்களின் ஒன்பதைக் கொண்ட ஒரு கோடெக்ஸ் ஆகும். ரோமர் புத்தகத்திற்குப் பிறகு பவுலின் கடிதங்களுள் எபிரெயர் புத்தகமும் உட்படுத்தப்பட்டிருப்பதை நான் கவனித்தேன். இவ்வுண்மை காட்டுவதென்னவெனில் பவுலின் பெயரைக் கொண்டிராத எபிரெயர் புத்தகம், அவரே எழுத்தாளர் என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வுண்மை நவீன கால நுட்பப் பிழை காண்போரால் விவாதத்துக்குட்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
நான் இதுவரை பார்த்திருந்த கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகள் அனைத்திலும் ஒரு குறிப்பிடத் தகுந்த முக்கிய அம்சம் என்னவென்றால் எவையுமே கடவுளுடைய பெயர் யெகோவா என்று கொண்டிருக்கவில்லை. ஆகையால் இவ்வாக்கியங்கள் பழமையானவை என்றும் அதிகளவு நம்பத்தகுந்த ஒன்று என்றும் இருந்தால், ஏன் புதிய உலக மொழிபெயர்ப்பு அதைக் கொண்டிருக்கிறது? இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் முதன் முதலில் ஆராய்ச்சி செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் துண்டுகள் இவ்விடையின் பகுதியை அளிக்கின்றன.
தெய்வீக நாமம் வெளிப்படுத்தப்படுதல்
அழும் அலரிச் செடிகளின் வளைவுகளால் கட்டப்பட்ட பழைய கல்லூரிகளின் மடங்கள் இருக்கும் இடமாகிய கேம்பிரிட்ஜ்-க்கு விஜயம் செய்தபோது நான் எவ்வளவாய் அனுபவித்தேன்! இக்கல்வி நிலையத்திற்குத் தான் கெய்ரோ கெனிஜாவின் பொருளடக்கங்களில் பெரும்பகுதி கொண்டுவரப்பட்டன. கெனிஜா என்பது, யூதர்களது ஜெப வீட்டில் பழைய பிரதிகளை வைத்திருந்த ஓர் அறையாக இருந்தது.
பழைய கெய்ரோவில், 1898-ல் பொருட்களை கேம்பிரிட்ஜ்-க்குக் கொண்டு செல்ல டாக்டர் சாலொமோன் ஸ்கக்டர் அனுமதி வாங்கியது வரை, அவற்றை சேகரிக்கும் ஆட்களைத் தாக்கத் தயார் நிலையில், கெனிஜாவின் நுழைவாயிலை ஒரு கொடிய பாம்பு காத்து வந்ததாக ஒரு மூடநம்பிக்கை இருந்தது. சுமார் ஓராயிரம் ஆண்டுகாலப் பகுதியில் சேகரிக்கப்பட்டிருந்த பிரதிகள் காணப்பட்டன. கையெழுத்துப் பிரதிகள் அங்கு வந்து சேர்க்கையில், தேயிலைப் பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டவையாய் குப்பையைப் போன்றிருந்தவற்றின் போட்டோ நகலை ஒரு நூல்நிலைய அலுவலர் எனக்குக் காண்பித்தார்.
இவையெல்லாவற்றிலும் அதிக அக்கறையூட்டுவது, ஒரு பாலிம்ப்செஸ்ட் அல்லது மீண்டும் பயன்படுத்தப்பட்ட சுருள் கண்டுபிடிக்கப்பட்டதாகும். “பாலிம்ப்செஸ்ட்” என்பதற்கு “மீண்டும் சுரண்டப்பட்டது” எனப் பொருள்படும். அது கழுவப்பட்டதாலோ, சுரண்டப்பட்டதாலோ பூர்வ எழுத்துக்கள் அகற்றப்பட்டு, அந்த விலையுயர்ந்த எழுதுபொருள் மறுபடியும் பயன்படுத்தப்படக்கூடும். அடிக்கடி பூர்வ எழுத்துக்கள் இன்னமும் கண்டுகொள்ளப்படக்கூடும்.
இக்காரியத்தில், சமீப எழுத்துக்களின் அடிப்பாகத்தில், கி.பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த யூத மதத்துக்கு மாறியவராக அக்கிலாவால் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வேதாகமங்களின் பகுதிகளின் நகல் காணப்பட்டது. வழக்கத்திலில்லாத எபிரெய எழுத்துக்களால் எழுதப்பட்ட யெகோவாவின் நாமத்தை கிரேக்க வாக்கியத்தில் பல இடங்களில் காண்பது என்னை வசீகரித்தது. இது காட்டுவது யாதெனில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் யெகோவாவின் நாமம் எபிரெய மொழியில் கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளிலும் எழுதப்பட்டது. அப்படியானால், தெய்வீக ஏவுதலால் கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களை முதலில் எழுதிய இயேசுவின் சீஷர்களும் அதைப் பயன்படுத்தியிருந்திருப்பர் என்பதைச் சந்தேகிப்பதற்கு எவ்விதக் காரணமுமில்லை.
பைபிள் வாக்கியங்களின் மாணாக்கரான காலஞ்சென்ற F. G. கென்யான் எழுதினார், “பண்டைய ஆசாரியர்களின் படைப்புக்களைப் போன்றும், கிட்டத்தட்ட எல்லா மத்திப காலப் படைப்புகளின் ஆசிரியர்களைப் போன்றும், பைபிள் புத்தகங்களின் காரியத்திலும், பூர்வ எழுத்துக்களும், அவற்றின் ஆரம்ப நகல்களும் மறைந்திருக்கின்றன.” என்றபோதிலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மிகப் பழைய கையெழுத்துப் பிரதி எதுவாகும்?
மான்செஸ்டரில் ஒரு சிறிய பொக்கிஷம்
அது யோவான் 18:31-34, 37, 38-ஐக் கொண்ட 3 1/2” × 2 1/4” அளவுள்ள ஒரு துண்டு ஆகும். யோவானின் சுவிசேஷம் முதலில் சுமார் கி.பி. 98-ல் எழுதப்பட்டது. இந்த நகலின் துண்டு, அதற்குப் பிறகு தான் எடுக்கப்பட்டது. அது கி.பி. 100-150 காலத்தைக் குறித்தது. எங்கே காணப்படக்கூடும்? 19-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் பருத்தித் தொழில் நிறைந்த பூம்டெளன், மான்செஸ்டரில் அங்கே ஜான் ரைலாண்ட்ஸ் நூலகத்தில் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் பொதுமக்களுக்குக் காட்சியாக இத்துண்டு வைக்கப்பட்டிருக்கிறது.
அத்தகைய ஒரு துண்டிலிருந்து அப்புத்தகத்தின் மூல அளவீடுகள் எப்படிக் கணக்கிடப்படக்கூடும் என்பதை நூல்நிலைய அலுவலர் பரிவுடன் எனக்கு விளக்கிக் காட்டினார். இப்பத்திரிகையின் அளவோடு ஒப்பிடப்படும், அளவுக்கு யோவான் சுவிசேஷத்தைக் கொண்ட 130-பக்க கோடெக்ஸிலிருந்து அது வந்திருப்பதாக அளவிடப்படுகிறது. இரு கண்ணாடித் தட்டுகளின் மேல் வைக்கப்படுகையில், அத்துண்டு, மிக மெல்லிய சிவப்பு நிற முத்திரைத்தாள் போன்று காணப்படுகிறது. அப்படியிருந்தாலும், ஆச்சரியப்படுமளவிற்கு, பாப்பிரஸின் பல துண்டுகள், வளைக்கப்படுகின்றன.
அதன் காலம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? பயன்படுத்தப்பட்ட பாப்பிரஸின் வகை, அதன் பொதுவான தோற்றம், மேலும் அதன் எழுத்துநடை நமக்குத் தகவல் அளிப்பதாக நான் கற்றுக்கொண்டேன். நான் மேலும் பார்த்ததென்னவெனில், அதே வேதபாரகராயில்லாமல் வேறொரு கையால் எழுதப்பட்டது, நான் பார்த்திருந்த வரைநயத்தோல் கையெழுத்துப் பிரதிகளின் மேல் எழுதப்பட்டிருந்தவற்றை விட வேறுபட்டதாயிருந்தது. அதில் நெட்டுக் கோடுகள் அழுத்தமாகவும், குறுக்குக் கோடுகள் முடிவில் பெரிய புள்ளியைக் கொண்டதாகவும் இருந்தன.
இச்சிறிய துண்டின் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன? சில நுட்பப்பிழை காண்போரின் கூற்றாகிய, சுவிசேஷங்கள், இயேசுவின் சீஷர்களால் எழுதப்படவில்லை, ஆனால் மெய்யாக அவைகள் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து போலியான நகல் எடுக்கப்பட்டவை என்பதை இல்லை என்பதாக நிரூபிக்கிறது. என்றபோதிலும், மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகிய சுவிசேஷங்கள் யோவான் சுவிசேஷத்திற்கு முன்னதாகவே எழுதப்பட்டதாக சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டதால் அவை அனைத்தும் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதற்கான ஆதாரத்தை இங்கே நாம் கொண்டிருக்கிறோம். முதல் நூற்றாண்டில், போலித்தனத்தின் எந்தத் தொகுதியும் உண்டுபண்ணப்பட்டிருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் தவறான கதைகளாக இருந்தால் அவர்களது தொகுப்பைக் கண்கண்ட சாட்சிகள் தவறென நிரூபித்திருக்கக்கூடும்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாம், கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான நகல்களை அவை எழுதப்பட்ட பிறகு அவ்வளவு குறுகிய காலப்பகுதிக்குள் வந்திருப்பதைக் கொண்டிருப்பது எவ்வளவு குறிப்பிடத்தகுந்தது! பிரபல மாணாக்கர் சர் ஃபிரெட்ரிக் கென்யான் பைபிளைக் குறித்து எழுதினார்: “வாக்கியத்திற்கு ஏராளமான ஆதாரத்தைக் கொண்ட அத்தகைய ஆரம்ப காலப் புத்தகத்தைப் போன்று வேறெந்தப் புத்தகமும் கொண்டில்லை, பாரபட்சமற்ற எந்த மாணாக்கரும், அவ்வாக்கியங்கள் அடிப்படையாக ஆதாரப்பூர்வமாக நம்மிடம் வந்திருக்கிறது என்பதை மறுக்கமாட்டார்.”
என் விஜயத்தின் விளைவாக, பதிவு செய்யும்படியாக தாவீது ஏவப்பட்டு எழுதிய வார்த்தைகளில் நான் மேலும் அதிக நம்பிக்கையை உணர்ந்தேன். “யெகோவாவுடைய சொற்கள் . . . சுத்த சொற்களாயிருக்கிறது. யெகோவாவே நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக் கொள்ளுவீர்.” (சங்கீதம் 12:6, 7)—அளிக்கப்பட்டது. (g88 7⁄22)
[பக்கம் 27-ன் படம்]
கோடெக்ஸ் சினாய்டிகஸ் என்பது, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் தயாரிக்கப்பட்ட கிரேக்க வாக்கியங்களுக்கு அடிப்படையானவற்றின் பகுதியை அளித்தது
[படத்திற்கான நன்றி]
Courtesy of the British Museum, London
[பக்கம் 28-ன் படம்]
கி.பி. 400-450 காலத்தைச் சேர்ந்த கோடெக்ஸ் அலெக்ஸாந்திரினஸ், அதன் பெயரை, எகிப்தில் அலெக்ஸாந்திரியாவிலுள்ள தலைமை நூலகத்திலிருந்து பெற்றது
[படத்திற்கான நன்றி]
By permission of The British Library
[பக்கம் 29ன் படம்]
யோவான் 18-ன் பகுதியின் இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்துண்டு, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மிகப் பழைய ஒன்றாகக் கருதப்படுகிறது