பாட்டு 176
உட்பிரவேசிக்கிற அரசருக்கு வரவேற்பளியுங்கள்!
1. அனைத்துக்கும் சொந்தமானசர்வவல்ல
தேவனை வரவேற்கும் காலம் இது.
தாமும் மைந்தனும் தேசங்கள் ஒன்று கூட்ட
பரலோகம் யுத்தக் கீதத்தை முழக்குகிறது.
‘வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்,
’மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்
.கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியை
சேனைகளின் தேவன்கொண்டு வருவார்.
ராஜ்யம் மூலம் தம்வல்லமையைக் காண்பித்து
பூமி முழுவதையும் மீண்டும் ஆளுகிறார்.
2. உன்னதப் பேரரசர் யெகோவா தேவன்
முடிவில்லா ராஜ்யத்தை ஸ்தாபித்தாரே.
நம் இருதயப்பூர்வ வரவேற்பிற்கு பாத்திரமானவர்;
அவர்சார்பாய் நின்று பேசுவோமே.
கதவுகளே உயருங்கள்!
நற்செய்தியை ஒன்றாய் கூடி மகிழ்ந்து பாடுகிறோம்.
‘யெகோவாதேவன் யுத்தத்திலும் வல்லவர்.’
அவருக்கு நன்றாய் செவிகொடுப்போம்.
அவர் ஆசீர்வதிக்கும் காலம் வந்ததே.
ராஜாவை “நல்வரவு!” என்று வரவேற்போம்.