பாடல் 41
நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!
1. என் தந்-தை-யே! தே-டி வந்-தே-னே!
உம்-மை போ-ல யா-ரும் இல்-லை-யே
ஈ-டே இல்-லா உம் பேர் போற்-று-வேன்!
(பல்லவி)
நான் வேண்-டும்-போ-து கே-ளும் யா-வே!
2. பூக்-கும் கா-லை உம் பே-ரன்-பா-லே!
ஸ்வா-சம் தந்-து பா-சம் வைப்-பீ-ரே
தா-யாய் மா-றி தா-கம் தீர்ப்-பீ-ரே!
(பல்லவி)
நான் வேண்-டும்-போ-து கே-ளும் யா-வே!
3. ஏக்-கம் கொண்-டேன் உம் பா-தை செல்-ல!
உங்-கள் கைக்-குள் நான் ஏறிக்-கொள்-ள
எந்-தன் பா-ரம் தாங்-கும் தே-வ-னே!
(பல்லவி)
நான் வேண்-டும்-போ-து கே-ளும் யா-வே!
(பாருங்கள்: யாத். 22:27; சங். 106:4; யாக். 5:11.)