பாடல் 141
உயிர் ஓர் அற்புதம்
1. பச்-சி-ளம் பிள்-ளை, ப-ரு-வ ம-ழை,
சூர்-ய கீற்-று, நெல் நாற்-று, தென்-றல் காற்-று,
இ-வை-யெல்-லா-மே ந-மக்-கா-க-வே
அ-ழ-கா-க ப-டைத்-தா-ரே நம் தே-வ-னே.
(பல்லவி)
பொன்-னா-ன ப-ரி-சை தந்-தா-ரே அன்-பாய்,
அ-வர்-மேல் மெய்-யன்-பு-தான் காட்-டு-வோம், கை-மா-றாய்;
ஈ-டில்-லா உ-யிர்க்-கு நன்-றி சொல்-லு-வோ-மே,
நம் தே-வன் ப-ரி-சே; அற்-பு-த ஜீ-வ-னே!
2. வாழ்க்-கை-யில் சி-லர் நொந்-து-போ-க-லாம்,
செத்-துப்-போ-க நெஞ்-சத்-தில் எண்-ணி-ட-லாம்.
ஆ-னால், அ-வர்-போல் எண்-ண மாட்-டோம் நாம்;
வா-ழும் ஒவ்-வோர் நொ-டி-யு-மே நன்-றி சொல்-வோம்!
(பல்லவி)
பொன்-னா-ன ப-ரி-சை தந்-தா-ரே அன்-பாய்,
பி-றர் மேல் மெய்-யன்-பு-தான் காட்-டு-வோம், கை-மா-றாய்;
ஈ-டில்-லா உ-யிர்க்-கு நன்-றி சொல்-லு-வோ-மே,
நம் தே-வன் ப-ரி-சே; அற்-பு-த ஜீ-வ-னே!
(பாருங்கள்: யோபு 2:9; சங். 34:12; பிர. 8:15; மத். 22:37-40; ரோ. 6:23.)