வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
நாசரேத்—தீர்க்கதரிசியின் இருப்பிடம்
“இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு,” என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆம், இயேசுவின் ஊழியத்தின்போதுங்கூட சாதாரணமாக அவர் பெயரைச் சொன்னாலே இப்போது பிரபலமாக இருக்கும் நாசரேத் பட்டணம் நினைவிற்கு வந்தது. அதன்படி அவரை கைதுசெய்ய வருபவர்கள், அவர்கள் இயேசுவை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லவில்லை, ஆனால் “நசரேயனாகிய இயேசுவை” என்று சொன்னார்கள்.—மத்தேயு 21:11; 26:71; யோவான் 18:3-5; அப்போஸ்தலர் 26:9.
மேலேயுள்ள படம் இன்று நாசரேத்துக்கு நீங்கள் சென்றால் என்ன காண்பீர்களோ அதைக் காட்டுகிறது. “கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்” ஒரு தூதன் வந்து மரியாளிடம் அவள் கடவுளுடைய குமாரனைப் பெறுவாள் என்று சொன்னபோது இருந்ததைவிட அது மிகப்பெரியதாக இருக்கிறது. (லூக்கா 1:26–33) வெகு காலத்துக்கு முன் நாசரேத் அடுத்தப் பக்கத்தில் காட்டப்பட்டிருப்பது போல வெகுவாக கிராமத்தைப் போல் சதுரவடிவான வீடுகள் கொண்ட தொகுதிகளாக ஒரு மலைப்பக்கத்தில் இருந்தது. இவைகளைப் போன்ற ஒரு வீட்டில் யோசேப்பும் மரியாளும் வசித்திருக்க வேண்டும். ஆனால் மரியாள் பிரசவிப்பதற்கு சிறிது காலத்துக்கு முன் அவர்கள் பெத்லகேமுக்குத் தெற்காகப் போகவேண்டியிருந்தது. அங்கே இயேசு பிறந்தார். ஏரோதின் கொலைதிட்டத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்ற அவர்கள் பிறகு எகிப்துக்கு ஓடிப்போனார்கள். அதன்பிறகு அவர்கள் “கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள்.”—லூக்கா 2:4, 39; மத்தேயு 2:13–23.
இப்படியாக இயேசு, எருசலேமை அல்லது தைபீரியாவைப் போன்ற ஒரு சுறுசுறுப்பான மையத்தில் அல்ல, ஆனால் ஓர் அமைதியான இடத்தில் வளர்ந்தார். நாசரேத்து, தானியம், திராட்சைப் பழங்கள், ஒலிவமரங்கள், அத்திப்பழங்கள் செழித்து வளர்ந்த கீழ் கலிலேயாவின் மலைகளால் சூழப்பட்ட வட்டமான பள்ளத்தாக்கில் இருந்தது. அது ரம்மியமான குளிர்வேனிற்காலங்களை அனுபவித்தது, ஆயினும் குளிர்காலங்கள் மேல் கலிலேயாவில் இருப்பதுபோல் அவ்வளவு கடுமையாக இருக்கவில்லை.
யோசேப்பு ஒரு தச்சனாக வேலைசெய்து அவனுடைய மனைவி, குமாரர்கள், குமாரத்திகளை, நவீன நாளைய நாசரேத்தில் இருக்கும் இந்தக் கடையைப்போல் ஒரு கடையை வைத்து ஆதரித்துவந்தான். அவன் கூரை உத்திரங்கள், பட்டணத்திலுள்ள வீடுகளுக்கு மரக்கதவுகள் அல்லது மேசைகள், உட்காரும் பீடங்கள் மற்றும் வேறு மரச்சாமான்களைத் தயார் செய்திருக்கக்கூடும். இயேசு கவனித்துக் கற்றுக்கொண்டார் என்பது நமக்குத் தெரியும், ஏனெனில் அவரும்கூட ‘தச்சன்’ என்று அழைக்கப்படுபவராக இருந்தார். (மாற்கு 6:3, மத்தேயு 13:55) நாசரேத்தைச் சுற்றியுள்ள விவசாய வேலை மற்ற தொழிலுக்கும் வழிநடத்தியிருக்கலாம். இந்த மிருகங்களின் மேல் காணப்படும் நுகத்தைப் போன்றதை இயேசு வடிவமைத்திருக்கலாம். இதற்கிடையில் யோசேப்பு அவருடைய கருவிகளை, ஏர்கள் அல்லது நுகத்திற்குப் பின்னால் இழுக்கப்படும் போரடிக்கும் சக்கரமில்லா வண்டிகளைச் செய்ய உபயோகித்திருக்கக்கூடும்.—2 சாமுவேல் 24:22; ஏசாயா 44:13.
வாலிபனாக இயேசு நாசரேத்தைச் சுற்றிய இடங்களுக்கு அதாவது வடக்கே எட்டு மைல்களுக்கு அப்பாலுள்ள “கலிலேயாவிலுள்ள கானா”வைப் போன்றவைக்கு நடந்து சென்றிருக்கலாம். அங்கே பிறகு அவர் தம்முடைய முதலாவது அற்புதத்தைச் செய்தார். (யோவான் 2:1–12) யெஸ்ரயேல் பள்ளதாக்கிற்கும் மோரே மேட்டிற்கும் நேராக தென்கிழக்காக சுமார் ஆறு மைல்கள் நடந்துசென்று 11-வது பக்கத்தில் காணப்படும் நாயீன் பட்டணத்தை இயேசு அடைவார்.a (நியாயாதிபதிகள் 6:33; 7:1) அவருடைய முதலாவது பிரசங்கப் பிரயாணத்தின்போது நாயீன் அருகே ஒரு சவ அடக்க ஊர்வலத்தை இயேசு எதிர்ப்பட்டதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பரிதாபப்பட்டு மனதுருகி அவர் ஒரு விதவையின் மகனை உயிர்த்தெழுப்பினார்.—லூக்கா 7:11–16.
நாசரேத் தேசத்தின் ஊடேச் செல்லும் எந்த முக்கிய தடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கவில்லை, இருப்பினும் அப்படிப்பட்டச் சாலைகளை அது எளிதாக அணுகக்கூடியதாக இருந்தது. இதை நீங்கள் யெகோவாவின் சாட்சிகளின் 1990 நாட்காட்டியின் அட்டையிலுள்ள தேசப்படத்தில் காணக்கூடும். அதில் இன்றைய நாசரேத்தின் ஒரு பெரிய படமும் இருக்கிறது. யெஸ்ரயேல் பள்ளத்தாக்கின் வழியாகச் செல்லும் கிழக்கு-மேற்கு தடம் அக்ரி துறைமுகத்தை, அல்லது தாலமியை கலிலேயா கடலுடனும், யோர்தான் பள்ளத்தாக்குடனும் இணைத்தது. அதைக் குறுக்கே பிரிக்கும் ஒரு தடம் தமஸ்குவிற்குத் தெற்கிலிருந்து வந்து சமாரியா வழியாக எருசலேமுக்குச் செல்வதாக இருந்தது.
நாசரேத்துக்கு அதன் சொந்த தேவாலயம் இருந்தது, அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் இயேசு “அவருடைய வழக்கப்படி” அங்கே சென்றார். அவர் ஏசாயா 61:1, 2 வசனங்களைப் படித்து அதைத் தமக்குப் பொருத்திக் கொண்டார். எப்படி பட்டணத்து ஜனங்கள் பிரதிபலித்திருப்பார்கள், அவர்களில் சிலர் அவர் வளர்ந்து வருவதைப் பார்த்திருப்பார்கள், அவருடைய தச்சு வேலைக்குக் கூலிகூட கொடுத்திருப்பார்களே? அவர்கள் மகா கோபமடைந்தார்கள், அவரை உயரமாயும் செங்குத்தாயுமிருந்த மலையிலிருந்து தள்ளிவிட முயற்சி செய்தார்கள், ஆனால் இயேசு தப்பித்துக்கொண்டார். (லூக்கா 4:16–30) தெளிவாகவே பிறகு அவர் நாயீனிலும் வேறு இடங்களிலும் செய்த கிரியைகளைப் பற்றிய செய்தி நாசரேத்துக்கு எட்டியது, ஏனெனில் அவர் திரும்பி வந்து உள்ளூர் தேவாலயத்தில் பிரசங்கித்த போது ஒருவனும் அவரைக் கொலை செய்ய வேண்டுமென்று பேசவில்லை. இருப்பினும் “அவர் அங்கு அநேக வல்லமையுள்ள கிரியைகளைச் செய்யவில்லை” ஏனென்றால் நாரேத்திலுள்ள அறிமுகமானவர்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கவில்லை.—மத்தேயு 13:53–58.
மாற்கு இயேசுவின் பிரதிபலிப்பை இப்படி பதிவு செய்கிறான்: “தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்.” என்னே ஒரு பரிதாபம், நாசரேத்தில் அநேகருடைய விஷயத்தில் இது உண்மையாக இருந்தது. இருப்பினும், அந்தப் பட்டணம், நாம் கனம் பண்ண தெரிந்துகொண்டிருக்கும் தீர்க்கதரிசியின் இருப்பிடமாக இருக்கிறதென்பதை நினைவுகூரலாம்.—மாற்கு 6:4. (w90 3/1)
[அடிக்குறிப்புகள்]
a நாசரேத்து யெகோவாவின் சாட்சிகளின் 1990-ம் நாட்காட்டியின் அட்டையின் மேலுள்ள தேசப்படத்தில் #2-ல் இருக்கிறது. மோரே மேடு #3-க்கு சற்று கீழே காணப்படுகிறது.
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.