வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
முழுக்காட்டுபவனாகிய யோவான் இயேசுவுக்கு முன்பாகவே மரித்துவிடுவார் என்பதை இயேசு முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று மத்தேயு 11:11-லிருந்து நாம் முடிவுசெய்ய வேண்டுமா?
ஆம், யோவான் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு கிறிஸ்தவனாக ஆவதற்கு உயிர்வாழ்ந்திருக்க மாட்டார் என்பதை இயேசு தெளிவாக அறிந்தவராக இருக்கவேண்டும், அதன் காரணமாகவே இயேசு சொன்னார்: “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.”—மத்தேயு 11:11.
காபிரியேல் தூதன் யோவானின் பிறப்பைக் குறித்து அறிவிக்கையில், யோவானைக் குறித்து “உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய்” இருப்பான் என்று முன்னுரைத்தார். யோவான் ஒரு முன்னோடியாக, யெகோவாவின் மேசியாவுக்காக ஒரு ஜனத்தை தயார் செய்து கொண்டிருந்தார். ஆனால் யோவான் தானே வரவிருந்த மேசியாவின் ஒரு சீஷனாக ஆவான் என்பதை அந்தத் தெய்வீக அறிவிப்பில் எதுவும் சுட்டிக்காட்டவோ அல்லது யோவானின் தகப்பனாகிய சகரியாவினுடைய தீர்க்கதரிசின அறிவிப்பில் அவர் அவ்விதமாக இருப்பார் என்றோ எதுவும் தெரிவிக்கவில்லை.—லூக்கா 1:17, 67-79.
இதன் காரணமாகவே இயேசுவை முழுக்காட்டின பின்பு, யோவான் தொடர்ந்து ஒரு ஜனத்தை ஆயத்தம் செய்யும் தன்னுடைய வேலை நியமிப்பில் நிலைத்திருப்பவராக பிரசங்கித்தும் முழுக்காட்டுதல் செய்துகொண்டுமிருந்தார். இயேசு பரிசுத்த ஆவியால் முழுக்காட்டுதலை கொடுப்பார் என்பதை யோவான் அற்புதமான முறையில் அறிந்திருந்தார், ஆனால், தான் பரிசுத்த ஆவியைப் பெற்று அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு கிறிஸ்தவனாக மாறுவான் என்பதாக சொல்லவில்லை. (மத்தேயு 3:11) இயேசு பெருகவும் தான் சிறுகவும் வேண்டும் என்பதையும்கூட யோவான் உணர்ந்திருந்தார்.—யோவான் 3:22-30.
மத்தேயு 11:11-ல் நாம் வாசிப்பதை இயேசு சொன்னபோது, யோவான் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டவராக இருந்தார். காவலில் வைக்கப்பட்டிருந்த இந்தத் தீர்க்கதரிசி, பரலோகங்களில் ராஜ-ஆசாரியர்களாக எதிர்காலத்தில் சேவிக்கப் போகும் மிகச் சிறியவனாயிருக்கிறவனிலும் சிறியவன் என்பதை இயேசு முன்கூட்டியே தெரியப்படுத்திவிட்டார். யோவான் சீக்கிரத்தில் மரிக்க இருப்பதை, பரலோக வாழ்க்கைக்கு “புதிய” மார்க்கம் திறக்கப்படுவதற்கு முன்பே பூமிக்குரிய காட்சியிலிருந்து மறைந்து போவார் என்பதையும்கூட இயேசு அறிந்திருந்தாகத் தெரிகிறது. (எபிரெயர் 10:19, 20) இயேசுவின் சீஷர்கள் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட ஆரம்பித்த அந்தப் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே வரையாக யோவான் உயிரோடிருக்க மாட்டான் என்பதை அது அர்த்தப்படுத்தியது. ஆகவே, யோவான் பரலோகத்துக்கு போக மாட்டார் என்பதை இயேசு அறிந்திருந்தார் என்பதையே மத்தேயு 11:11-லுள்ள இயேசுவின் குறிப்பு காண்பிக்கிறது என்பதாக எடுத்துக்கொள்ளப்படலாம்.