எல்லா மதங்களும் கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா?
எல்லா மதங்களுமே கடவுளைப் பிரியப்படுத்துகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கும் எந்த வகையான வணக்கமும் நல்ல நடத்தையை ஓரளவுக்காவது உற்சாகப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு அது போதுமா?
‘உங்கள் வழிபாட்டில் வெறுமனே உண்மை மனதோடு இருங்கள், அப்போது கடவுள் அதில் பிரியப்படுவார். எல்லா மதங்களிலும் நல்ல அம்சங்கள் இருக்கின்றன,’ என்று சிலர் சொல்கின்றனர். உதாரணமாக, பஹாய் மதம், உலகிலுள்ள ஒன்பது முக்கிய மதங்களில் உள்ளவற்றை அதனுடைய நம்பிக்கைகளாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்த விஷயத்தில் சென்றிருக்கிறது. இவையனைத்தும் தெய்வீக ஆரம்பத்தை உடையதாய் இருக்கின்றன என்றும் ஒரே சத்தியத்தின் பல்வேறு கருத்துக்களாக இருக்கின்றன என்றும் இந்த மதத் தொகுதி உறுதியாயிருக்கிறது. இது எப்படி இவ்வாறு இருக்கமுடியும்?
மேலும், பொது இடங்களில் அநேக மக்களை கொல்லுவதற்கு சாத்தியமுள்ள மூச்சைத் திணறடிக்கும் வாயுவை வைக்கும்படி அதன் அங்கத்தினர்களை கட்டளையிடும் மதம் எவ்வாறு கடவுளைப் பிரியப்படுத்தமுடியும் என்று கேட்பதற்கு உங்களுக்கு காரணம் இருக்கிறது. ஜப்பானில் உள்ள ஒரு மதத்தொகுதிக்கு எதிராய் அந்தக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அல்லது அதன் அங்கத்தினர்களை தற்கொலை செய்துகொள்ளும்படி செய்விக்கும் ஒரு மதத்தில் கடவுள் பிரியங்கொள்கிறாரா? சில வருடங்களுக்கு முன்பு, ஜிம் ஜோன்ஸ் என்ற மதத் தலைவரை பின்பற்றியவர்களுக்கு அவ்வாறு நடந்தது.
பூர்வீக காலங்களைக் குறித்து சிந்தித்துப் பார்க்கையில், 1618 முதல் 1648 வரை நடைபெற்ற முப்பது வருட போரைப் பற்றிய விஷயத்தை எடுத்துக்கொண்டால், போரைத் தூண்டி ஊக்கமளிக்கும் மதங்கள் கடவுளைப் பிரியப்படுத்தக்கூடுமா? என்று நாம் கேட்கலாம். உலகத்தின் சர்வலோக சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தின்படி, கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையே ஏற்பட்ட மதசம்பந்தமான சண்டைகள், “ஐரோப்பிய சரித்திரத்திலேயே மிகவும் பயங்கரமான போர்களில் ஒன்றாக” இருந்தன.
11-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை நடந்த மத சம்பந்தமான சிலுவைப் போர்களும்கூட அதிர்ச்சியடையச் செய்யும் இரத்தஞ்சிந்துதலில் விளைவடைந்தன. உதாரணமாக, முதல் சிலுவைப் போரில், கிறிஸ்தவ சிலுவைப் போர் வீரர்கள் என்று உரிமை பாராட்டிக்கொண்டவர்கள் ஜெரூசலேமில் குடியிருந்த யூதர்களையும் முகமதியர்களையும் கொடூரமாக படுகொலை செய்தார்கள்.
13-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து சுமார் 600 வருடங்கள் வரை நீடித்திருந்த கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையின்போது என்ன நடந்தது என்பதையும்கூட சிந்தித்துப் பாருங்கள். மதத் தலைவர்களின் கட்டளைகளின்படி, ஆயிரக்கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர். கிறிஸ்துவின் பாதிரிமார்—போப்பாண்டவர் ஆட்சியின் இருண்ட அம்சங்கள் என்ற ஆங்கில புத்தகத்தில் பீட்டர் டி ரோசா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “[மனித] இனத்தின் சரித்திரத்திலேயே, மனித நன்னடத்தையின் பேரில் பண்பற்ற முறையில் மிகவும் கொடூரமாகவும் தொடர்ந்தும் செய்த கடுந்தாக்குதலுக்கு போப்பாண்டவரின் பெயரில் செயல்பட்ட [கடும் விசாரணையாளர்கள்] பொறுப்புள்ளவர்களாயிருந்தனர்.” ஸ்பெயினைச் சேர்ந்த டார்க்கிமாடா என்ற கொடூரமான டொமினிக்கன் விசாரணையாளரைக் குறித்து டி ரோசா சொல்கிறார்: “1483-ல் நியமிக்கப்பட்ட இவர் பதினைந்து வருடங்கள் கொடூரமாக ஆட்சி செய்தார். 1,14,000-க்கும் மேற்பட்ட நபர்களின் மரணத்துக்கு டார்க்கிமாடா பொறுப்பாளியாக இருந்தார், அதில் 10,220 பேர் எரிக்கப்பட்டனர்.”
கிறிஸ்தவமண்டல மதங்கள் மட்டுமே இரத்தப்பழிக்கு பொறுப்புள்ளவையாய் இல்லை. பன்சா என்ற தன் புத்தகத்தில் பிரெஞ்சு தத்துவஞானி ப்ளேஸ் பாஸ்கல் இவ்வாறு குறிப்பிட்டார்: “மத சம்பந்தமான திட நம்பிக்கையால் தூண்டப்படும்போதுதானே மனிதர் தீமையான காரியங்களை அவ்வளவு முழுமையாகவும் மனமகிழ்வோடும் செய்கின்றனர்.”
அவற்றின் கனிகளால் கண்டுணரப்படுகிறது
கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து பார்த்தால், ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதானது ஒரு காரணக்கூறின் பேரில் மட்டுமே சார்ந்ததாய் இல்லை. ஒரு மதம் அவருக்கு ஏற்கத்தகுந்ததாக இருக்க வேண்டுமென்றால், அதன் போதனைகளும் நடவடிக்கைகளும் அவருடைய எழுதப்பட்ட சத்திய வார்த்தையாகிய பைபிளுக்கு இசைவாக இருக்க வேண்டும். (சங்கீதம் 119:160; யோவான் 17:17) கடவுள் அங்கீகரிக்கும் வணக்கத்தின் கனிகள் யெகோவா தேவனின் தராதரங்களுக்கு இசைவாக இருக்க வேண்டும்.
கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்வதாக பொய்யாய் உரிமை பாராட்டிக்கொள்ளும் தீர்க்கதரிசிகள் இருப்பார்கள் என்று இயேசு கிறிஸ்து தம் மலைப்பிரசங்கத்தில் குறிப்பிட்டுக் காண்பித்தார். இயேசு சொன்னார்: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:15-20) நாம் ஆவிக்குரியப்பிரகாரமாய் விழிப்புள்ளவர்களாய் இருக்கவேண்டிய அவசியத்தை இந்த வார்த்தைகள் காண்பிக்கின்றன. ஒரு மதத் தலைவரோ அல்லது தொகுதியோ கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததாய் இருப்பதாக நாம் நினைத்துக்கொள்ளலாம், ஆனால் நாம் அவ்வாறு நினைப்பது தவறாக இருக்கக்கூடும்.
எச்சரிக்கையாய் இருப்பதற்கான தேவை
ஒரு மதம் கடவுளுடைய அங்கீகாரத்தை பெற்றிருப்பதாக உரிமை பாராட்டிக்கொண்டு அதன் ஊழியர்கள் பைபிளிலிருந்து பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தாலும், அது கடவுளுக்கு பிரியமாயிருக்கும் வணக்க முறை என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. அதன் தலைவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டத்தக்க காரியங்களையும்கூட செய்யலாம், அவை அவர்கள் வாயிலாக கடவுள் செயல்படுவதாக தோன்றலாம். அவ்வாறு இருப்பினும், கடவுளுக்கு ஏற்கத்தகுந்த கனிகளைப் பிறப்பிக்காமல், அந்த மதம் இன்னும் பொய் மதமாகவே இருக்கக்கூடும். மோசேயின் நாட்களில் மந்திரவித்தை செய்துகொண்டிருந்த எகிப்தின் மந்திரவாதிகளால் உணர்ச்சிகளைத் தூண்டத்தக்க காரியங்களை செய்யமுடிந்தது, ஆனால் அவர்கள் கடவுளுடைய அங்கீகாரத்தை நிச்சயமாகவே பெற்றிருக்கவில்லை.—யாத்திராகமம் 7:8-22.
கடந்த காலங்களைப் போலவே இன்றும் அநேக மதங்கள், கடவுள் எதை சத்தியம் என்று அறிவிக்கிறாரோ அதை கடைப்பிடிப்பதற்கு பதிலாக மனிதருடைய கருத்துக்களையும் தத்துவங்களையும் முன்னேற்றுவிக்கின்றன. அப்படியென்றால் பைபிள் கொடுக்கும் எச்சரிப்பு விசேஷமாக பொருத்தமாய் இருக்கிறது: “லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”—கொலோசெயர் 2:8.
நல்ல கனிகளைப் பற்றியும் கெட்ட கனிகளைப் பற்றியும் பேசிய பிறகு இயேசு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”—மத்தேயு 7:21-23.
கனிகளை ஆராய்ந்து பாருங்கள்
அப்படியென்றால், கடவுளுக்கு ஏற்கத்தகுந்தது என்பதை முடிவு செய்வதற்கு முன் ஒரு மதத்தின் கனிகளை கவனிப்பது இன்றியமையாதது என்பது தெளிவாயிருக்கிறது. உதாரணமாக, அந்த மதம் அரசியலோடு சம்பந்தப்பட்டிருக்கிறதா? அவ்வாறு இருக்கிறதென்றால், யாக்கோபு 4:4-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகளை கவனியுங்கள்: “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” மேலும், இயேசு தம்மை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களைக் குறித்து பின்வருமாறு சொன்னார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) காணக்கூடாத ஆவி சிருஷ்டியாகிய பிசாசாகிய சாத்தான், அதாவது, ‘பொல்லாங்கனுக்குள் கிடக்கும்’ இந்த உலகின் அரசியலோடு கடவுளுடைய பார்வையில் நல்லதாய் இருக்கும் மதம் உட்படுவதில்லை. (1 யோவான் 5:19) அதற்கு மாறாக, கடவுள் அங்கீகரிக்கும் மதம், இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின் கீழ் அவருடைய ராஜ்யத்தை உண்மைத்தன்மையோடு வெளிப்படையாய் ஆதரித்து, அந்தப் பரலோக அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறது.—மாற்கு 13:10.
அரசாங்க வேண்டுகோள்களுக்கு கீழ்ப்படியாமல் போவதை வெளிப்படையாய் ஆதரிக்கும் மதம் கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததாய் இருக்குமா? அப்போஸ்தலனாகிய பவுலின் புத்திமதியை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் பதில் மிகவும் வெளிப்படையாய் இருக்கிறது: “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.” (தீத்து 3:1) “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்,” என்று இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு எடுத்துக் காண்பித்தார்.—மாற்கு 12:17.
தேசங்கள் இடும் போர்களில் பங்குகொள்ளும்படி ஒரு மதம் உற்சாகப்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். ‘நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” என்று 1 பேதுரு 3:11 நம்மை ஊக்குவிக்கிறது. மற்றொரு தேசத்திலுள்ள உடன் வணக்கத்தாரை போரில் கொல்வதற்கு விரும்பும் அங்கத்தினர்களை உடைய மதம் கடவுளை எப்படி பிரியப்படுத்த முடியும்? கடவுளின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் மதத்தின் அங்கத்தினர்கள் அவருடைய முக்கிய பண்பாகிய அன்பை பிரதிபலிக்கின்றனர். மேலும் இயேசு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) வன்முறையான விரோதத்தை ஊக்குவித்து தேசங்கள் ஈடுபடும் போர்களில் அப்படிப்பட்ட அன்புக்கு பொதுவில் எதுவும் இருக்கமுடியாது.
மெய் மதம், போரை விரும்பும் ஆட்களை சமாதானத்தை விரும்பும் ஆட்களாக மாற்றுகிறது. அது பின்வரும் வார்த்தைகளில் முன்னறிவிக்கப்பட்டது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:4) விரோதம் நிறைந்த சொற்களை உமிழ்வதற்குப் பதிலாக, மெய் வணக்கத்தை அப்பியாசிப்போர் இந்தக் கட்டளைக்கு இணங்கச் செயலாற்றுகின்றனர்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”—மத்தேயு 22:39.
மெய் மதத்தை அப்பியாசிப்போர் ஒழுக்கயீனமான வாழ்க்கை பாணிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து, யெகோவா தேவனின் உயர்வான தராதரங்களுக்கு இசைவாக வாழ முயற்சி செய்கின்றனர். கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9-11.
முடிவான நடவடிக்கை எடுப்பதற்கான காலம்
பொய் வணக்கத்துக்கும் மெய் மதத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை கண்டுணருவது அத்தியாவசியமானது. பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில், பொய் மத உலக பேரரசு “மகா பாபிலோன்” என்று அடையாளம் காண்பிக்கப்பட்டிருக்கிறது, அவள் அடையாளப்பூர்வமான வேசியாக இருக்கிறாள், ‘அவளோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்கள்.’ அவள் இரத்தப்பழி நிறைந்தவளாய் இருக்கிறாள், “தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த” பொற்பாத்திரத்தை கையில் பிடித்திருக்கிறாள். (வெளிப்படுத்துதல் 17:1-6) கடவுள் ஏற்றுக்கொள்ளக்கூடியது எதுவும் அவளிடம் இல்லை.
முடிவான நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே காலம். மகா பாபிலோனில் இன்னும் இருந்துகொண்டிருக்கும் உண்மை மனதுள்ள மக்களுக்கு நம்முடைய அன்பான சிருஷ்டிகர் இந்த அழைப்பை கொடுக்கிறார்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:4.
கடவுளைப் பிரியப்படுத்தும் மதத்தை அப்பியாசிக்க விரும்பினால், நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு ஏன் நன்கு அறிமுகமாகிக்கொள்ளக்கூடாது? அவர்களுடைய நம்பிக்கைகள் சிலவற்றையும் அதோடுகூட அவற்றிற்கான வேதப்பூர்வமான காரணங்களையும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விளக்க அட்டவணை பட்டியலிடுகிறது. சாட்சிகளுடைய நம்பிக்கைகள் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாய் இருக்கிறதா என்பதைக் காண உங்கள் பைபிள்களை எடுத்துப் பாருங்கள். மெய் வணக்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் கனிகளை அவர்களுடைய மதம் பிறப்பிக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஆராய்ந்து பாருங்கள். அது அவ்வாறு இருக்கிறது என்று கண்டுபிடித்தால், கடவுளைப் பிரியப்படுத்தும் மதத்தை நீங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.
[பக்கம் 5-ன் பெட்டி]
யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன
நம்பிக்கை பைபிள் அடிப்படை
கடவுளுடைய பெயர் யாத்திராகமம் 6:3;
யெகோவா சங்கீதம் 83:18
பைபிள் கடவுளுடைய யோவான் 17:17;
வார்த்தை 2தீமோத்தேயு 3:16, 17
இயேசு கிறிஸ்து மத்தேயு 3:16, 17;
கடவுளுடைய குமாரன் யோவான் 14:28
மனிதவர்க்கம் ஆதியாகமம் 1:27; 2:7
பரிணமிக்கவில்லை ஆனால்
சிருஷ்டிக்கப்பட்டது
முதல் மனிதனின் பாவத்தின் ரோமர் 5:12
காரணமாக மானிடருக்கு
மரணம் ஏற்பட்டது
மரணத்தின்போது ஆத்துமா பிரசங்கி 9:5, 10;
உயிரோடிருப்பதில்லை எசேக்கியேல் 18:4
நரகம் என்பது மனிதவர்க்கத்தின் யோபு 14:13;
பொதுவான பிரேதக்குழி வெளிப்படுத்துதல் 20:13,
கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு
மரித்தோரின் யோவான் 5:28, 29;11:25;
நம்பிக்கை உயிர்த்தெழுதல் அப்போஸ்தலர் 24:15
கிறிஸ்து தம் பூமிக்குரிய மத்தேயு 20:28;
ஜீவனை மீட்கும்பொருளாக 1 பேதுரு 2:24;
கீழ்ப்படிதலுள்ள
மானிடர்களுக்காக கொடுத்தார் 1 யோவான் 2:1, 2
ஜெபங்களை கிறிஸ்துவின் மத்தேயு 6:9;
மூலம் யெகோவாவுக்கு யோவான் 14:6,
மட்டுமே ஏறெடுக்க வேண்டும் 13, 14
ஒழுக்கங்கள் பேரிலுள்ள 1 கொரிந்தியர் 6:9, 10
பைபிளின் சட்டங்களுக்கு
கீழ்ப்படிய வேண்டும்
வணக்கத்தில் சொரூபங்களை யாத்திராகமம் 20:4-6;
பயன்படுத்தக்கூடாது 1 கொரிந்தியர் 10:14
ஆவியுலகத் தொடர்பை உபாகமம் 18:10-12;
தவிர்க்க வேண்டும் கலாத்தியர் 5:19-21
இரத்தத்தை ஒருவருடைய ஆதியாகமம் 9:3, 4;
உடலுக்குள்
எடுத்துக்கொள்ளக்கூடாது அப்போஸ்தலர் 15:28, 29
இயேசுவை உண்மையாய் யோவான் 15:19; 17:16;
பின்பற்றுவோர் உலகத்திலிருந்து
பிரிந்திருக்க வேண்டும் யாக்கோபு 1:27; 4:4
கிறிஸ்தவர்கள் சாட்சி ஏசாயா 43:10-12;
கொடுத்து நற்செய்தியை மத்தேயு 28:19, 20
அறிவிக்கின்றனர் 24:14;
தண்ணீரில் முழுவதுமாக மாற்கு 1:9, 10;
மூழ்குவதன் மூலம் யோவான் 3:22;
முழுக்காட்டுதல் அப்போஸ்தலர் 19:4, 5
பெறுவது கடவுளுக்கு
ஒப்புக்கொடுத்தலை
அடையாளப்படுத்துகிறது
மத சம்பந்தமான யோபு 32: 21, 22;
பட்டப்பெயர்கள் வேதப்பூர்வமற்றவை மத்தேயு 23:8-12
நாம் ‘முடிவுகாலத்தில்’ தானியேல் 12:4;
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் மத்தேயு 24:3-14;
கிறிஸ்துவின் பிரசன்னம் மத்தேயு 24:3, NW;
காணக்கூடாதது யோவான் 14:19;
சாத்தான் இந்த உலகத்தின் யோவான் 12:31;
காணக்கூடாத அதிபதி 1 யோவான் 5:19
கடவுள் தற்போதைய தானியேல் 2:44;
பொல்லாத ஒழுங்குமுறையை வெளிப்படுத்துதல் 16:14,16;
அழித்துவிடுவார் 18:1-8
கிறிஸ்துவின் கீழ் ஏசாயா 9:6, 7;
கடவுளுடைய ராஜ்யம் தானியேல் 7:13, 14;
பூமியை நீதியால் மத்தேயு 6:10
ஆட்சிசெய்யும்
ஒரு “சிறுமந்தை” கிறிஸ்துவோடு லூக்கா 12:32;
பரலோகத்தில் ஆட்சிசெய்யும் வெளிப்படுத்துதல்
14:1-4; 20:4
கடவுள் அங்கீகரிக்கும் லூக்கா 23:43;
மற்றவர்கள் ஒரு பரதீஸிய யோவான் 3:16
பூமியில் நித்திய ஜீவனை வெளிப்படுத்துதல் 21:1-4
பெற்றுக்கொள்வர்
[பக்கம் 4-ன் படம்]
கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையின்போது
[பக்கம் 6-ன் படம்]
ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர்
[பக்கம் 7-ன் படம்]
மெய் மதம் அதன் நல்ல கனிகளால் அறியப்பட்டிருக்கிறது
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover: Garo Nalbandian