குடும்ப பைபிள் படிப்பு —கிறிஸ்தவர்கள் கொடுக்கவேண்டிய ஓர் முன்னுரிமை
1 அனைத்து மனித அமைப்புகளிலும் குடும்ப தொகுதியே மிகவும் பழமையானது. அது யெகோவாவுக்கு அருமையானது, ஏனெனில் ‘பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பமும் அதன் நாமகாரணருக்கே கடமைப்பட்டிருக்கிறது.’ (எபே. 3:15, NW) ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்கையில் குடும்பம் உண்டாகிறது. பிள்ளைகள் யெகோவாவால் வரும் சுதந்தரம். (ஆதி. 2:24; சங். 127:4) ஆகவே, குடும்பத்தின் ஆவிக்குரியத்தன்மை முதல் அக்கறைக்குரிய ஒன்றாக இருக்கிறது. விசுவாசத்தில் இருக்கிற குடும்ப அங்கத்தினர்களிடத்தில், விசேஷமாக பருவ வயதினரிடத்தில் மிகவும் அடிக்கடி வினைமையான பிரச்சினைகள் இருக்கிற இடங்களில், வீட்டில் ஒரு குடும்ப பைபிள் படிப்பு நடத்தப்படாமலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அநேக குடும்பங்கள், மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களுடைய குடும்பங்கள் உட்பட, தங்களுடைய பள்ளிசெல்லும் வயதுடைய பிள்ளைகள் உலகப்பிரகாரமான செல்வாக்குகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதை காண்கின்றன என்பது வருந்தத்தக்கதாக இருக்கிறது. பிரச்சினைக்கான ஊற்றுமூலம், வீட்டில் பைபிள் போதனைக்கு ஏறக்குறைய எப்பொழுதும் கவனம் செலுத்தாமலிருப்பதே ஆகும்.
2 குடும்பங்கள் கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டுமானால், குடும்பப் படிப்புக்காக கண்டிப்பாய் ஒழுங்காக நேரத்தை ஒதுக்கிவைக்க வேண்டும். ஒழுங்காக குடும்ப பைபிள் படிப்பை நடத்துவதில் குடும்பத் தலைவர்கள் ஊக்கமாக முயற்சிசெய்ய வேண்டும். மேலும் முழு குடும்பத்தினரும் பலனடைவதற்காக குடும்ப வணக்கத்தின் இந்த அம்சத்தை வெற்றிகரமாக்குவதற்கு மற்ற குடும்ப அங்கத்தினர்களும் அதேபோலவே உதவிசெய்ய வேண்டும். அவர்கள் இப்பொழுது குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளுக்கு தகுந்த கவனம் செலுத்தவில்லையாகில், அவர்கள் எதிர்காலத்தில் கடுமையான, வேதனைமிக்க பிரச்சினைகளையும்கூட எதிர்ப்படும் சாத்தியம் இருக்கிறது என்பதை அனைவரும் மதித்துணர வேண்டும்.
3 ஒரு படிப்பை எவ்வாறு நடத்த வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எப்பொழுது, எவ்வளவு நேரத்திற்கு அதை நடத்த வேண்டும்? பிள்ளையின் இருதயத்தைச் சென்றெட்டுவதைக் குறித்ததில் நீங்கள் எவ்வாறு நிச்சயமாயிருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களுக்கு, காவற்கோபுரம், அக்டோபர் 1, 1994, பக்கம் 26-ஐ தயவுசெய்து கலந்தாலோசியுங்கள்.
4 குடும்பப் படிப்பு ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும். அதை குடும்பத்தின் தேவைகளுக்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும். தினவசனத்தை கலந்தாலோசிப்பதைக் குறித்ததிலும்கூட இது உண்மையாயிருக்க வேண்டும். அந்த நாளை கடவுளுடைய வார்த்தையை கலந்தாலோசிப்பதுடன் ஆரம்பிப்பது என்னே ஓர் சிறந்த காரியம்! அந்த நாளில் அதன்பேரில் தியானிப்பது, ‘கற்புள்ளவைகளை, அன்புள்ளவைகளை, நற்கீர்த்தியுள்ளவைகளை சிந்தித்துக்கொண்டிருப்பதற்கு’ நமக்கு உதவும். (பிலி. 4:8) அந்த நாளின் தினவசனத்தைக் கலந்தாலோசிப்பதும் உங்களுடைய குடும்பப் படிப்பும் ஒழுங்காக நடக்கிறதா? இதில் நீங்கள் முன்னேற்றம் செய்ய வேண்டுமா?
5 வெற்றிகரமான குடும்பப் படிப்புக்கான முக்கிய கூட்டுப்பொருட்கள், பெற்றோரால் காண்பிக்கப்படுகிற சந்தோஷமும் உற்சாகமுமே ஆகும். (சங்கீதம் 40:8-ஐ ஒப்பிடுக.) அதோடு, பிள்ளைகளுடைய முயற்சியைப் பெற்றோர்கள் பாராட்டி, யெகோவாவின் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்த அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
6 குடும்ப ஒற்றுமைக்கும் யெகோவாவுக்கான தனிநபருடைய உண்மைமாறா பற்றுறுதிக்கும் எதிராக மிக ஏராளமான அம்சங்கள் கிரியைபுரிந்து வருவதால், படிப்பை நடத்துவதில் குடும்பத் தலைவர் முன்னின்று வழிநடத்துவது இன்றியமையாததாகும். சாப்பாட்டு நேரங்கள் போன்ற இயல்பான சூழமைவில் ஆவிக்குரிய காரியங்களை கலந்தாலோசிக்கலாம் என்றாலும், முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட பைபிள் கலந்தாலோசிப்புகள் குடும்ப வெற்றிக்கும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் முக்கியமானவையாகும்.—உபா. 6:6-9.
7 பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்துவார்களானால், இப்பொழுதும் எதிர்காலத்திலும் அநேக ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம். கடவுளுடைய சட்டத்தின் மதிப்பை பிள்ளைகள் உணர்ந்து, அது உண்மையில் நல்லதும் பிரயோஜனமும் உள்ளதென்று உறுதியாக நம்பினவர்களாக இருக்கையில், வெறுமனே கூட்டங்களுக்கு வழக்கமாக ஆஜராகி, ஊழியத்தில் உங்களுடன் பங்குகொள்கிறவர்களாக இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் சத்தியத்தை தங்களுடையதாக்கிக் கொள்வார்கள். அவர்கள் சத்தியத்தை தங்களுடையதாக்கிக் கொண்டாலொழிய, சாத்தானுடைய தந்திரமான செயல்களுக்கு பலியாவதற்கான அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகவே, பெற்றோர்களே, உங்களுடைய குடும்பப் படிப்புக்குக் கொடுக்கவேண்டிய முக்கிய ஸ்தானத்தை சந்தோஷத்துடன் கொடுங்கள்.