நோவா—கடவுளோடு சஞ்சரித்தார் வீடியோவிலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
ஆதியாகமம் 6:1 முதல் 9:19 வரை வாசியுங்கள் அல்லது மறுபார்வை செய்யுங்கள். பிறகு நோவா என்ற ஆங்கில வீடியோவை பார்த்துவிட்டு பின்வரும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பீர்கள் என சிந்தியுங்கள்: (1) நோவாவின் நாட்களில் உலகம் எப்படியிருந்தது, அதற்கு காரணம் என்ன? (2) நோவா ஏன் விசேஷித்தவராக இருந்தார், என்ன வேலையை கடவுள் அவருக்கு கொடுத்தார், ஏன்? (3) பேழை எங்கே கட்டப்பட்டிருக்கலாம், கட்ட எவ்வளவு காலம் எடுத்தது, எவ்வளவு பெரிதாக இருந்தது? (4) நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழை கட்டுவதோடு வேறு என்ன வேலையிலும் ஈடுபட வேண்டியிருந்தது? (5) பேழையின் கதவு மூடப்பட்டவுடன் உள்ளே எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? (6) ஜலப்பிரளயத்திலிருந்து தப்பித்த பிறகு நீங்கள் எவ்வாறு உணர்ந்திருப்பீர்கள்? (7) ஜலப்பிரளயம் பற்றி அவ்வப்போது என்ன நினைப்பூட்டுதல் கொடுக்கப்படுகிறது, அது எதை அர்த்தப்படுத்துகிறது? (8) நோவா பற்றிய பைபிள் பதிவிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும், கடவுள் நமக்கு நியமித்திருக்கும் வேலையையும் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்? (9) நோவாவையும் அவர் குடும்பத்தையும் பரதீஸில் சந்திக்கையில் என்ன கேள்விகளை கேட்க விரும்புகிறீர்கள்? (10) நோவா வீடியோவை எப்படி உபயோகிக்கலாம் என்று இப்போது நினைக்கிறீர்கள்?