பார்வை இல்லாதவர்களுக்கு எப்படி உதவலாம்?
1. பார்வை இல்லாதவர்களுக்கு இயேசு எப்படி இரக்கம் காட்டினார்?
1 இயேசு இப்போது எரிகோ என்ற ஊரை விட்டு போய்க்கொண்டிருக்கிறார். வழியில் பார்வை இல்லாத இரண்டு பிச்சைக்காரர்கள், “எஜமானே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று கெஞ்சுகிறார்கள். இன்னும் சில நாட்களில் இயேசுவுக்கு மரணம் காத்திருக்கிறது. அதனால், வரப்போகும் சோதனைகளைப் பற்றி நிறைய விஷயங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில்கூட, அவர்கள்மேல் இரக்கப்பட்டு, அவர்களுக்கு பார்வை கொடுக்கிறார். (மத். 20:29-34) இயேசு இப்படி செய்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
2. பார்வை இழந்த ஒருவருக்கு எப்படி சாட்சி கொடுக்கலாம்?
2 உதவும் வழிகள்: பார்வை இழந்த ஒருவரை நீங்கள் எங்கேயாவது பார்த்தால், அவரிடம் போய் பேசுங்கள். உதவி செய்ய விரும்புவதாக சொல்லுங்கள். பொதுவாக, பார்வை இழந்தவர்களை நிறைய பேர் ஏமாற்றுவார்கள். அதனால், ஆரம்பத்தில் உங்களை பார்த்து அவர் பயப்படலாம். ஆனால், நண்பரைப் போல் அன்பாக, அக்கறையாக பேசினால் அவர் புரிந்துகொள்வார். சிலருக்கு சுத்தமாக பார்வை தெரியாது, சிலருக்கு கொஞ்சம் தெரியும்; அதனால், ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதத்தில் எப்படி உதவலாம் என்று யோசித்து பாருங்கள். தேவையான உதவியை செய்த பிறகு, பைபிளை பற்றி பேச ஆரம்பிக்கலாம். சங்கீதம் 146:8 ஏசாயா 35:5, 6 போன்ற வசனங்களை வாசித்துக் காட்டலாம். அவருக்கு பிரெயில் மொழி படிக்க தெரிந்தால், அந்த மொழியிலேயே பிரசுரங்களைக் கொடுக்கலாம். jw.org-ல் இருக்கும் ஆடியோ பதிவுகளைக் கேட்க உதவலாம். பார்வை இல்லாதவர்கள் ஸ்கிரீன் ரீடர் என்ற புரோகிராம் உதவியுடன் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறார்கள். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் இருக்கும் வார்த்தைகளை வாசித்து காட்டும். அவருடைய கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் ரீடர் இருந்தால் நம் வெப்சைட்டில் இருக்கும் பிரசுரங்களை டவுன்லோடு செய்ய உதவுங்கள்; பிரசுரங்களை RTF (Rich Text Format)-லும் டவுன்லோடு செய்ய உதவுங்கள்.—“பார்வை இழந்தவர்களுக்கு உதவும்போது...” என்ற பெட்டியை பாருங்கள்.
3. பார்வை இல்லாதவர்களை நாம் எப்படி தேடிக் கண்டுபிடிக்கலாம்?
3 “தேடிக் கண்டுபிடியுங்கள்”: பொதுவாக, பார்வை இல்லாதவர்கள் புதிய ஆட்களிடம் பேச தயங்குவார்கள். அதனால், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அவர்களை பார்ப்பது கஷ்டம். பார்வை இல்லாதவர்களை “தேடிக் கண்டுபிடியுங்கள்.” (மத். 10:11) அவர்களுக்கு சாட்சி கொடுக்க முயற்சி எடுங்கள். உங்கள் பள்ளியில் அல்லது வேலை செய்யும் இடத்தில் பார்வை இல்லாதவர்கள் யாராவது இருந்தால், நீங்களே போய் அவர்களிடம் பேசுங்கள். ஊழியம் செய்யும் இடத்தில் பார்வை இல்லாதவர்களுக்கான பள்ளி இருந்தால், அந்த பள்ளி லைப்ரரியில் பிரெயில் மொழி பிரசுரங்களை வைக்கலாமா என்று கேளுங்கள். உங்கள் நண்பர்களுடைய குடும்பத்தில் யாராவது பார்வை இல்லாதவர்கள் இருக்கலாம். நீங்கள் ஊழியம் செய்யும் இடத்தில் யாராவது “பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் சங்கம்” வைத்திருக்கலாம். அல்லது “பார்வை இழந்தவர்களுக்கான இல்லம்” நடத்தலாம். அவர்களை சந்தித்து, யெகோவாவின் சாட்சிகள் பார்வை இல்லாதவர்களுக்கு உதவ தயாராயிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். பிரெயில் மொழி பிரசுரங்களையோ ஆடியோ பதிவுகளையோ அவர்களிடம் கொடுங்கள். கடவுள் அவர்களுக்கு சீக்கிரம் பார்வை தர போகிறார் என்பதை பைபிளில் இருந்து காட்டுங்கள். அதோடு, jw.org-லிருந்து “Without It, I Would Feel Lost” என்ற வீடியோவையும் காட்டுங்கள். பார்வை இல்லாத ஒருவருக்கு பிரெயில் மொழி பைபிள் எவ்வளவு உதவியாக இருந்தது என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். பார்வை இல்லாதவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் எந்தளவு முயற்சி எடுக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால், நிறைய பார்வை இல்லாதவர்களிடம் பேச உங்களுக்கு உதவி செய்வார்கள்.
4. ஜேனட் என்ற சகோதரியிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
4 ஜேனட் என்ற சகோதரி பார்வை இழந்தவர்களுக்கான இல்லத்திற்கு போனார். அங்கு ஒரு இளம் பெண்ணிடம் பேசினார். “இயேசு பூமியில இருக்கும்போது பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொடுத்தார். அதே மாதிரி திரும்பவும் இயேசு செய்யப்போறார்”னு ஜேனட் சொன்னார். வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ படித்து காட்டி, கடவுளுடைய அரசாங்கத்தில் இது எப்படி நடக்கும்னு சொன்னார். இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணிற்கு ஒரே ஆச்சரியம்: “ஏன்னா, நாங்களோ எங்க முன்னோர்களோ செஞ்ச தப்புனாலதான் எங்களுக்கு கண்ணு தெரியாம போச்சுனு பொதுவா ஜனங்க நினைக்கிறாங்க. ஆனா, இந்த மாதிரி ஒரு விஷயத்தை நான் கேட்டதே இல்லை”னு அந்த பெண் சொன்னார். பிறகு, அந்தப் பெண் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை வெப்சைட்டில் படிக்க ஜேனட் உதவி செய்தார். இப்போது அந்தப் பெண் வாரத்திற்கு இரண்டு தடவை ஜேனட்டோடு பைபிள் படிக்கிறார்.
5. பார்வை இல்லாதவர்கள்மேல் இயேசுவைப் போலவே அக்கறை காட்டுவதால் என்ன நன்மை?
5 இந்த உலகத்தின் கடவுளான சாத்தான் எல்லாருடைய பார்வையையும் குருடாக்கியிருக்கிறான். (2 கொ. 4:4) இயேசுவை போல பார்வை இல்லாதவர்களுக்காக நாம் அற்புதம் எல்லாம் செய்ய முடியாது. ஆனால், அவர்களுடைய மனக்கண்களைத் திறக்க முடியும். கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் உண்மைகளைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவ முடியும். இயேசு “மனதுருகி” எரிகோ ஊரிலிருந்த இரண்டு குருடர்களுக்கு பார்வை தந்தார். (மத். 20:34) அவரை போலவே, பார்வை இல்லாதவர்களிடம் அக்கறை காட்ட வேண்டும். யெகோவாவைப் பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், யெகோவா மட்டும்தான் அவர்களுக்கு நிரந்தரமாக பார்வை தர முடியும்.