பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 1-5
கடவுளுடைய செய்தியை எசேக்கியேல் சந்தோஷமாக அறிவித்தார்
ஒரு தரிசனத்தில், யெகோவா எசேக்கியேலிடம் ஒரு சுருளைக் கொடுத்து அதைச் சாப்பிடும்படி சொன்னார். அந்தத் தரிசனத்தின் அர்த்தம் என்ன?
அந்தச் சுருளிலிருந்த கடவுளுடைய செய்தியை எசேக்கியேல் முழுமையாக புரிந்துகொள்ளவும் ஆழமாக யோசித்துப் பார்க்கவும் வேண்டியிருந்தது. அப்படிச் செய்தால்தான் அந்தச் செய்தி அவருடைய மனதைத் தொடும். மற்றவர்களிடம் பேசவும் தூண்டும்
யெகோவாவுக்குச் சேவை செய்வதை எசேக்கியேல் பெரிய பாக்கியமாக நினைத்ததால் அந்தச் சுருள் அவருக்குத் தேன்போல் இனிப்பாக இருந்தது