பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 32-34
காவல்காரனுடைய மிகப் பெரிய பொறுப்பு
அந்தக் காலத்தில், நகரத்தின் மதில்களுக்கும் கோபுரங்களுக்கும் மேலே காவல்காரர்கள் நிறுத்தப்பட்டார்கள். ஏதாவது ஆபத்து வந்தால் அதைப் பற்றி எச்சரிப்பது அவர்களுடைய வேலையாக இருந்தது. யெகோவா, அடையாள அர்த்தத்தில் எசேக்கியேலை ‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு காவல்காரனாக’ நியமித்தார்.
கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தாவிட்டால் அழிவு வருமென்று இஸ்ரவேலர்களை எசேக்கியேல் எச்சரித்தார்
யெகோவா சொல்லும் என்ன செய்தியை இன்று நாம் அறிவிக்கிறோம்?
எசேக்கியேல் எச்சரிப்பு செய்தியை அறிவித்ததன் மூலம், தன்னுடைய உயிரையும் மற்றவர்களுடைய உயிரையும் காப்பாற்றினார்
யெகோவாவின் செய்தியை அவசரமாக அறிவிக்க எது நம்மைத் தூண்ட வேண்டும்?