கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாடல்கள் பாடி யெகோவாவைச் சந்தோஷமாகப் புகழுங்கள்
பவுலும் சீலாவும் சிறையில் இருந்தபோது, பாடல்கள் பாடி யெகோவாவைப் புகழ்ந்தார்கள். (அப் 16:25) அப்படிப் பாடியது, சகித்திருப்பதற்கு அவர்களுக்கு உதவியது என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது நம்முடைய விஷயத்துக்கு வரலாம். வணக்கத்துக்காக நாம் பாடும் பாடல்களும், பிராட்காஸ்டிங்கில் இருக்கும் பாடல்களும் நம்மை உற்சாகப்படுத்துகின்றன; சோதனைகளின்போது சகித்திருக்க உதவுகின்றன. எல்லாவற்றையும்விட, யெகோவாவைப் புகழ உதவுகின்றன. (சங் 28:7) சில பாடல்களின் வரிகளையாவது மனப்பாடம் செய்யும்படி நாம் உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறோம். இதைச் செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா? குடும்ப வழிபாட்டில் நாம் பாடல்கள் பாடிப் பழகலாம், பாடல் வரிகளை மனப்பாடம் செய்யவும் முயற்சி செய்யலாம்.
பிள்ளைகள் யெகோவாவைப் புகழ்ந்து பாடுகிறார்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
பாடல்கள் பாடுவதன் மூலம் நாம் எப்படி நன்மையடையலாம்?
ரெக்கார்டிங் செய்வதற்கு ஆடியோ/வீடியோ இலாகா என்னென்ன தயாரிப்புகளைச் செய்கிறது?
ரெக்கார்டிங் செய்வதற்கு பிள்ளைகளும் அவர்களுடைய குடும்பத்தாரும் எப்படித் தயாராகிறார்கள்?
உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்ன, ஏன்?