-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
யெகோவாவின்: கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் இந்த மொழிபெயர்ப்பில், கடவுளுடைய பெயரான யெகோவா 237 இடங்களில் வருகிறது; அதில் முதல் இடம் இதுதான்.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.
யெகோவாவின் தூதர்: இந்த வார்த்தைகள் எபிரெய வேதாகமத்தில் நிறைய வசனங்களில் வருகின்றன; அதில் முதல் வசனம் ஆதி 16:7. செப்டுவஜன்ட்டின் ஆரம்பகாலப் பிரதிகளில் ஆஜிலாஸ் (தேவதூதர்; தூதர்) என்ற கிரேக்க வார்த்தைக்குப் பிறகு கடவுளுடைய பெயரைக் குறிக்கும் எபிரெய எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோலத்தான், இஸ்ரவேலில் உள்ள நஹால் ஹெவரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு செப்டுவஜன்ட் பிரதியில் (அதாவது, சக 3:5, 6 வசனங்களில்) கொடுக்கப்பட்டுள்ளது; இந்தப் பிரதி கி.மு. 50-க்கும் கி.பி. 50-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. (இணைப்பு C-ஐப் பாருங்கள்.) நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தில் கடவுளுடைய பெயரை நீக்காமல், “யெகோவாவின் தூதர்” என்றே மொழிபெயர்த்திருக்கின்றன.—இணைப்பு A5-யும் இணைப்பு C-யும் பாருங்கள்.
தாவீதின் மகனே: தான் சொல்லவரும் விஷயத்தைக் கேட்பதற்கு யோசேப்பைத் தயார்படுத்த யெகோவாவின் தூதர் அவரை “தாவீதின் மகனே” என்று அழைத்தார்; இப்படி, தாவீதோடு கடவுள் செய்த ஒப்பந்தத்தில் உள்ள வாக்குறுதியை யோசேப்புக்கு அவர் ஞாபகப்படுத்தினார்.—மத் 1:1, 6-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
உன் மனைவி மரியாளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வர: யூதர்களின் வழக்கப்படி, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நிச்சயம் செய்யப்பட்டபோது திருமண சம்பிரதாயங்கள் ஆரம்பமாயின. கணவன் தன் மனைவியைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனபோது திருமண சம்பிரதாயங்கள் முடிவுக்கு வந்தன. பொதுவாக, இந்தக் கடைசி சம்பிரதாயம் ஒரு குறிப்பிட்ட நாளில் நடந்தது; அது ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அப்போதுதான், அந்தப் பெண்ணைத் தன்னுடைய மணத்துணையாக ஏற்றுக்கொண்டதை மணமகன் எல்லாருக்கும் முன்னால் தெரியப்படுத்தினார். இப்படி, திருமணம் எல்லாருக்கும் தெரிவிக்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டது; அது பதிவு செய்யப்பட்டு, நிரந்தர ஒப்பந்தமாக ஆனது.—ஆதி 24:67; மத் 1:18, 19-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
கர்ப்பமாகியிருக்கிறாள்: நே.மொ., “அவளிடம் உற்பத்தியாயிருக்கிறது; உண்டாயிருக்கிறது.” இதற்கான கிரேக்க வார்த்தை வசனம் 16-ல் “பிறந்தார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-