-
மத்தேயு 3:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அதற்கு இயேசு, “என்னைத் தடுக்காதே; இதன் மூலம்தான், நீதியான எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும்” என்று சொன்னார். அதன் பின்பு, யோவான் அவரைத் தடுக்கவில்லை.
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
நீதியான எல்லாவற்றையும் . . . செய்ய: இயேசு ஞானஸ்நானம் எடுத்தது, மனம் திரும்புதலுக்கு அடையாளமாக இருக்கவில்லை. ஏனென்றால், அவர் பாவம் இல்லாதவர், கடவுளுடைய நீதியான சட்டங்களை அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்தவர். அவர் ஞானஸ்நானம் எடுத்தது, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்ததுக்கு அடையாளமாகவும் இருக்கவில்லை. ஏனென்றால், ஏற்கெனவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தார். உண்மையில் அவருடைய ஞானஸ்நானம், மேசியாவாக யெகோவாவின் நீதியான விருப்பத்தை நிறைவேற்ற தன்னை அளிப்பதற்கு அடையாளமாக இருந்தது. தன்னையே மீட்புவிலையாகக் கொடுப்பதும் அதில் அடங்கியிருந்தது. சங் 40:7, 8-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை இயேசு நிறைவேற்றினார்; இந்தத் தீர்க்கதரிசனம் எபி 10:5-9-ல் விளக்கப்பட்டிருக்கிறது.
-