-
மத்தேயு 5:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, மலைமேல் ஏறினார்; அவர் உட்கார்ந்த பின்பு, சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்.
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
மலைமேல்: அநேகமாக, இந்த மலை கப்பர்நகூமுக்கும் கலிலேயா கடலுக்கும் பக்கத்தில் இருந்திருக்கலாம். இயேசு இந்த மலைமேல் சற்று உயரமான இடத்துக்கு ஏறிப்போயிருப்பார்; இந்த மலைமேல் இருந்த சமவெளியில் கூடிவந்தவர்களுக்கு அவர் கற்பிக்க ஆரம்பித்தார்.—லூ 6:17, 20.
அவர் உட்கார்ந்த பின்பு: உட்கார்ந்து கற்பிப்பது யூதப் போதகர்களின் வழக்கமாக இருந்தது; அதுவும் முறைப்படி கற்பிக்கும் வகுப்புகளில் இது வழக்கமாக இருந்தது.
சீஷர்கள்: மாத்தட்டிஸ் என்ற கிரேக்க பெயர்ச்சொல் “சீஷர்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இந்த வசனத்தில்தான் அது முதல் தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு மாணவரைக் குறிக்கிறது. போதகரோடு அவருக்கு நெருங்கிய பந்தம் இருப்பதையும், அது அவருடைய வாழ்க்கையையே வடிவமைப்பதையும் அது மறைமுகமாக அர்த்தப்படுத்துகிறது. இயேசு பேசுவதைக் கேட்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தபோதிலும், அவர் முக்கியமாகத் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீஷர்களின் நன்மைக்காகவே பேசியதாகத் தெரிகிறது.—மத் 7:28, 29; லூ 6:20.
-